ETV Bharat / state

ஆனைமலை பகுதிகளில் விதைப்பந்துகள் தூவும் பணி தீவிரம்! - Pollachi forest seed ball disperse

SEED BALL DISPERSE: பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருக்கும் வனப்பகுதிகளில் விதைப் பந்துகளை தூவி காடு வளர்க்கும் பணியில் வனத்துறையினரும், என்.சி.சி. மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

கட்டளை அதிகாரி பெர்குணன்
கட்டளை அதிகாரி பெர்குணன் (PHOTO CREDITS- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 8, 2024, 7:56 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதி தம்மம்பதி. சமீபத்தில் தம்மம்பதி பகுதியில் உள்ள 120 ஹெக்டேரையும், அதேபோல் சர்க்கார்பதி என்னும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கும் 30 ஹெக்டேர் பரப்பில் இருந்த கருவேலமரம் மற்றும் உன்னிச் செடிகள் வனத்துறையினரால் அகற்றப்பட்டது. வனப்பகுதிகளில் கருவேலமரம் மற்றும் களைச் செடிகளை அகற்றி நல்ல மரங்களை நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், அங்கு புதிதாக மரங்களை வளர்க்க விதைப்பந்துகள் தூவும் பணியில் வனத்துறையினர் இறங்கினர்.

காடு வளர்ப்பில் கவனம் செலுத்தும் வனத்துறை (செய்தியாளர் சந்திப்பு) (VIDEO CREDITS- ETV Bharat Tamil Nadu)

விதைப்பந்துகளை நட்ட மாணவர்கள்: இதனால் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட 150 ஹெக்டேர் பரப்பளவில் கல்லூரி மாணவர்களைக் கொண்டு 13 லட்சம் விதைப்பந்துகள் தூவப்பட்டது. இதற்காக நேற்று பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இருக்கும் என்.சி.சி மாணவர்கள் சுமார் 300 பேர் விதைப்பந்துகளைத் தூவினர். இதனையடுத்து, இன்று ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம், விமானப்படை மற்றும் தேசிய மாணவர் படையின் அதிகாரிகள் தலைமையில் இந்தப் பணி தீவிரமாக நடைபெற்றது.

நடப்பட்ட பல்வகை விதைகள்: இதில் வாகை, பூவரசு, இலந்தை, புளி, சந்தனம், ஆலமரம் மற்றும் அரச மரங்களின் விதைகள் மாணவர்களால் நடப்பட்டது. மேலும், செய்தியாளரிடம் பேசிய கட்டளை அதிகாரி பெர்குணன் கூறுகையில், “இந்த 13 லட்சம் விதைப்பந்துகள் போல மேலும் விதைப்பந்துகளை ஹெலிகாப்டர் மூலமாக தூவுவதற்காக திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார். மேலும், இதில் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம், பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி, டாப்ஸ்லிப் வனச்சரகர் சுந்தரவடிவேல் மற்றும் 60க்கும் மேற்பட்ட வனத்துறையினர் இப்பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் துணை ராணுவத்தினர் அத்துமீறல்? ஜோலார்பேட்டையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.