ETV Bharat / state

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: பிரதமர் மோடி உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 12:29 PM IST

MK Stalin Birthday: தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரைப் பிரபலங்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மு.க ஸ்டாலின்
முதல்வர் மு.க ஸ்டாலின்

சென்னை: தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மு.க ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரைப் பிரபலங்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து: குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வாழ்த்து: பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில், "பிறந்தநாள் கொண்டாடும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்களவை சபாநாயகர் வாழ்த்து: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில், "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கேரள முதலமைச்சர் வாழ்த்து: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேரள முதலமைச்சரான பினராயி விஜயன், அன்பு தோழருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், முடிவில்லாத மகிழ்ச்சியுடன், நல்ல ஆரோக்கியத்துடன் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி முதலமைச்சர் வாழ்த்து: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில், “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நிதின் கட்கரி வாழ்த்து: மந்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கார்கே வாழ்த்து: காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில், “தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளுடன் நலமாக வாழவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அகிலேஷ் யாதவ் வாழ்த்து: சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில், “தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். வரும் ஆண்டு மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றிகள் நிறைந்ததாக இருக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தேஜஸ்வி யாதவ் வாழ்த்து: பீகாரின் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழிசை வாழ்த்து: தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ராமதாஸ் வாழ்த்து: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில், 71-ஆம் பிறந்தநாளைக் கொண்டாடும் தமிழக மு.க.ஸ்டாலின் நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அன்புமணி ராமாதாஸ் வாழ்த்து: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில், “தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் அவரது பொதுவாழ்வு தொடர வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன் வாழ்த்து: நடிகரும், மக்கள் மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில், “தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நீடூழி வாழ வேண்டும் என அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ரஜினி வாழ்த்து: நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிஜர் விஜய் வாழ்த்து: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்” என்று தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை வாழ்த்து: தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில், முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி தொடர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: தலைவர்கள் நினைவிடம் முதல் தொண்டர்கள் சந்திப்பு வரை.. முழுவிவரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.