ETV Bharat / state

ஃபார்முலா 4 கார் பந்தய பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் உயிரிழப்பு! - Formula 4 car race

Formula 4: சென்னையில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தய பாதுகாப்புப் பணியில் இருந்த சரக உதவி காவல் ஆணையர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

கொளத்தூர் சரக உதவி ஆணையர் சிவக்குமார்
கொளத்தூர் சரக உதவி ஆணையர் சிவக்குமார் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2024, 6:03 PM IST

சென்னை: சென்னை தீவுத்திடலில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுகிறது. இந்த கார் பந்தயத்திற்காக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனபடி, கார் பந்தயம் நடைபெறும் இடத்தில் உள்ள விஐபி வாயிலில் கொளத்தூர் சரக உதவி ஆணையர் சிவக்குமார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில், பிற்பகல் 1.10 மணி அளவில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, பாதுகாப்பிற்காக இருந்த இடத்திலேயே மயக்கம் அடைந்து விழுந்தார். பின்னர், அவரை மீட்ட சக அதிகாரிகள், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், பாதுகாப்பு பணியின் போது உதவி ஆணையர் சிவகுமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பது மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: சென்னை பார்முலா 4 கார் பந்தயம்: முதல் நாள் முழு அட்டவணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.