ETV Bharat / state

சென்னையில் மீண்டும் தலைத்தூக்குகிறதா பைக் ரேஸ் கலாச்சாரம்? பலியான காவலர் - police died hit by race bike - POLICE DIED HIT BY RACE BIKE

police died hit by race bike: மதுரவாயல் - தாம்பரம் பைபாஸில் அதிவேகமாக வந்த ரேஸ் பைக் மோதி காவலர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து ஏற்படுத்திய பைக் மற்றும் உயிரிழந்த காவலர்
விபத்து ஏற்படுத்திய பைக் மற்றும் உயிரிழந்த காவலர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 4, 2024, 6:19 PM IST

சென்னை: சென்னையை அடுத்த திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் குமரன்(53). இவருக்குத் திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மனைவி அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் போரூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் போக்குவரத்து காவல் பிரிவிலிருந்து மாற்றப்பட்டு, சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியமர்த்தப்பட்டார். இந்நிலையில் மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் போரூர் சுங்கச்சாவடி அருகே இன்று பிற்பகல் தனது இரு சக்கர வாகனத்தின் மூலம் காவலர் குமரன் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது தாம்பரத்தில் இருந்து அதிவேகமாக வந்த ரேஸ் பைக் ஒன்று குமரன் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். சற்று நேரத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். காவலர் குமரன் மீது வேகமாக பைக்கில் வந்து மோதிய நபர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவலர் குமரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பைக் ஓட்டி விபத்தை உண்டாக்கிய நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் பைக் ரேஸால் நடந்த இந்த விபத்தில் காவலர் ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி மதுரவாயல்-தாம்பரம் பைபாஸ் சாலையில் ரேஸ் நடத்தப்படுவது இது ஒன்றும் முதல் முறையல்ல என்றும், நீண்ட வருடங்களாக ஆட்டோ ரேஸ், கார் ரேஸ், பைக் ரேஸ் எனச் சாலையில் செல்லும் பயணிகள் அனைவருக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் சட்ட விரோதமாக ரேஸ்கள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஆட்டோ ரேஸ் ஒன்றில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பரிதாபமாக இறந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சில மாதங்கள் எந்தவிதமான ரேஸும் நடத்தப்படாமல் காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். ஆனால் விடுமுறை நாளான இன்று சாலைகள் வெறிச்சோடி இருக்கும் எனச் சட்டவிரோத ரேஸ் கும்பல் மீண்டும் ஒரு பைக் ரேஸ் நடத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது இன்று மட்டும் நடந்ததுதானா அல்லது சமீபகாலமாக மீண்டும் பைக் ரேஸ் கலாச்சாரம் மதுரவாயல் தாம்பரம் சாலையில் தலைத்தூக்கி உள்ளதா என்பதை காவல்துறையினர் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் வாகன ஓட்டிகளும் தெரிவித்துள்ளனர். மேலும் இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: அருப்புக்கோட்டை அருகே புளியமரம் மீது கார் மோதி விபத்து; 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.