கடலூர்: கடலூரைச் சேர்ந்த ஆயுதப்படை காவல்துறையில் 45 வயதான நபர் பணியாற்றி வருகிறார். இவருடைய 14 வயது மகள் கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தன்னுடைய 14வயது மகளுக்கு காவலர் பாலியல் சீண்டல் அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமிடம் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து புகார் அளித்துள்ளார். இதையடுத்து, மாணவியின் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில், ஆய்வாளர் ராதிகா, மாணவியின் தந்தையான மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஆயுதப்படை காவல்துறை பணியாளரான அவரது தந்தையை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க: "எனது சாவுக்கு காரணமானவர்களை.." நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் எழுதியதாக மற்றொரு கடிதத்தில் பகீர் தகவல்