ETV Bharat / state

ரூட் தல பஞ்சாயத்து போதாதென்னு இதுவேறயா? - சென்னை கல்லூரி மாணவர்களை எச்சரித்து அனுப்பிய போலீஸ்! - College students clash - COLLEGE STUDENTS CLASH

College students clash in Chennai: சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே மோதலில் ஈடுபட்ட பச்சையப்பன் மற்றும் நந்தனம் கல்லூரி மாணவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மோதலில் ஈடுபட்ட மாணவர்கள்
மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 4, 2024, 4:36 PM IST

தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயில் ஒன்று நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) காலை சைதாப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, ரயிலில் பயணித்த பச்சையப்பன் மற்றும் நந்தனம் கல்லூரி மாணவர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த பிரச்சனையில் ஒருவருக்கு ஒருவர் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில் மின்சார ரயிலின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது மட்டுமின்றி, ரயிலில் பயணித்த இரு பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், கைகளில் கத்தியுடன், தகாத வார்த்தைகளால் பேசி, கற்களை வீசி மாணவர்கள் மோதலில் ஈடுபடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

ஏற்கனவே, ரூட்டு தல விவகாரத்தில் மாணவர்கள் பேருந்து மீது ஏறி அராஜகத்தில் ஈடுபட்டதும், ரயிலில் கத்தி போன்ற ஆயுதங்களைக் கொண்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதனை அடுத்து சென்னை காவல்துறை இதனை தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு கல்லூரியிலும் அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய துணை ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, மாணவர்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

அது மட்டுமல்லாமல் இதுபோன்ற அராஜக செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால் கல்லூரியில் இருந்து நீக்கப்படுவதுடன், அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பிலிருந்து எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இருப்பினும், மாணவர்கள் தொடர்ந்து இதேபோன்று செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில், பச்சையப்பன் மற்றும் நந்தனம் கல்லூரி மாணவர்கள் இடையே நடந்த மோதல் குறித்து பயணிகள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், சம்பவம் தொடர்பான வீடியோவில் பதிவாகி இருந்த 3 மாணவர்களை பிடித்து விசாரித்த போலீசார், அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: அருப்புக்கோட்டை அருகே புளியமரம் மீது கார் மோதி விபத்து; 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.