தேனி: பெரியகுளம் அருகே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக புளியந்தோப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த 25 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றிய வடகரை போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிகுண்டு வைத்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை காடுவெட்டி பகுதியில் பெரியகுளம் அரண்மனைக்கு சொந்தமான புளியந்தோப்பு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக மாட்டுக் கொழுப்புக்குள் நாட்டு வெடிகுண்டுகளை வைத்து, புளியந்தோப்பில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் பாதுகாப்பு கிராம காவல் தலைவருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில், கிராம காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்ற நிலையில், அங்கு விலங்குகளை வேட்டையாடுவதற்காக புளியந்தோப்பு பகுதியில் பல இடங்களில் நாட்டு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, வனவிலங்கை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டு வைத்துவிட்டு தப்பி ஓட முயன்ற, இரண்டு நபர்களை விவசாய கிராம காவல் குழுவினர் விரட்டிச் சென்றபோது, ஒருவரை பிடித்துள்ளனர்.
இதில், பிடிபட்ட நபர் பெரியகுளம் அருகே உள்ள ஏ. வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (30) மற்றும் தப்பி ஓடியவர் ஆனந்தராஜ் (வயது 36) என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பிடிபட்ட நபரை வைத்து புளியந்தோப்பு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட 29 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர்.
அதனைத்தொடர்ந்து, பெரியகுளம் வடகரை போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு சோதனை காவல்துறையினர் கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை பத்திரமாக மீட்டு சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் எங்கிருந்து பெறப்பட்டது? வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட இவர்கள் திட்டம் தீட்டு உள்ளார்களா? நாட்டு வெடிகுண்டுகள் குறித்து வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற பல்வேரூ கோணத்தில் தொடர் சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கைப்பற்றப்பட்ட 29 நாட்டு வெடிகுண்டுகளை, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு செயல் இழக்க செய்வதற்கான நடவடிக்கைகளையும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். வனவிலங்களை வேட்டையாடுவதற்காக புளியந்தோப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த 25 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: கட்சியில் சேர்ந்து 6 மாசமாச்சு.. அண்ணே சரிதானே? - மேடையில் ஓப்பனாக பதவி குறித்து பேசிய விஜயதாரணி!