ETV Bharat / state

கேரள வங்கியில் ரூ.17 கோடி அடகு நகை மோசடி; தனியார் வங்கி மேலாளர் உதவியது எப்படி? - kerala govt bank branch gold scam

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2024, 7:33 PM IST

Updated : Aug 23, 2024, 7:48 PM IST

Kerala Govt Bank Branch Gold Scam: கோழிக்கோட்டில் உள்ள அரசு வங்கிக் கிளையில், வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 17 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் திருடப்பட்ட வழக்கில் முன்னாள் வங்கி மேலாளர் கைது செய்யப்பட்ட நிலையில், திருப்பூரில் உள்ள தனியார் வங்கி மேலாளரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்
மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் (Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மதா ஜெயக்குமார் (34). இவர் கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள அரசு வங்கிக் கிளையில் மேலாளராக இருந்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக இந்த வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வந்த ஜெயக்குமார், கடந்த ஜூலையில் எர்ணாகுளத்தில் உள்ள பாலரிவட்டம் கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அவர் இன்னும் அங்கு பொறுப்பேற்கவில்லை.

இதற்கிடையில், கோழிக்கோட்டில் உள்ள கிளைக்கு இர்ஷாத் என்பவர் மேலாளராக நியமிக்கப்பட்டார். இவர் அந்தக் கிளையில் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளை மறுமதிப்பீடுக்கு ஆய்வு செய்தார். கடந்த ஜூன் 13 முதல் ஜூலை 6 வரை அடகு வைக்கப்பட்டிருந்த 17 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளில் போலி நகைகள் இருப்பது தெரிய வந்தது. உடனே மேலாளர் இர்ஷாத், இதுகுறித்து வடகரை போலீசில் புகார் அளித்தார். போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கோழிக்கோடு கிளையில் ஏற்கனவே மேலாளராக இருந்து இடமாற்றப்பட்ட மதா ஜெயக்குமார் பாலரிவட்டம் கிளையில் பொறுப்பேற்காமல் இருப்பதால் அவர் மீது சந்தேகம் எழுந்தது. இதனால் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், மதா ஜெயக்குமார் தெலங்கானாவில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று மதா ஜெயக்குமாரை கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், “கோழிக்கோட்டில் உள்ள வங்கியில் இருந்து 26.5 கிலோ நகைகள் மோசடி செய்ததாகவும், அந்த நகைகளை பல்வேறு இடங்களில் உள்ள நண்பர்களிடம் பிரித்துக் கொடுத்துள்ளதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். மேலும், திருப்பூரைச் சேர்ந்த நண்பர், தனியார் வங்கி மேலாளர் கார்த்தி உதவியுடன் இந்த மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கேரளாவில் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளை கார்த்தி உதவியுடன், திருப்பூரில் உள்ள தனியார் வங்கியில் 17 நபர்களின் பெயரில் வைத்து பணம் பெற்றுள்ளார். இதனையடுத்து, கேரளா போலீசார் அவரை திருப்பூர் அழைத்து வந்து தனியார் வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த 496 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கார்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் இன்று காலை முதல் தனியார் வங்கியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தற்போது காங்கேயம் சாலையில் உள்ள தனியார் வங்கியில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வங்கியிலும் ஏழு கிலோ தங்க நகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. குற்றம் சுமத்தப்பட்ட கார்த்திக்கை போலீசார் மருத்துவப் பரிசோதனைக்காக திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். மேலும், வங்கியில் கேரளா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் நல்லூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : 26 கிலோ நகையுடன் மாயமான வங்கி மேலாளர் கைது.. கோழிக்கோடு டூ தெலங்கானா வரை சுற்றியது எப்படி? - bank of maharashtra kerala theft

Last Updated : Aug 23, 2024, 7:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.