ETV Bharat / state

பங்குத்தந்தை வீட்டிற்கு பேச்சுவார்த்தைக்குச் சென்ற நபர் சடலமாக மீட்பு.. போலீசார் தீவிர விசாரணை..!

Kanyakumari: கன்னியாகுமரி அருகே தேவாலய பங்குத்தந்தை இல்லத்திற்கு பேச்சுவார்தைக்குச் சென்ற நபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பங்குத்தந்தை வீட்டிற்கு பேச்சுவார்த்தைக்கு சென்ற நபர் பலி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2024, 1:01 PM IST

Updated : Jan 21, 2024, 5:17 PM IST

பங்குத்தந்தை வீட்டிற்கு பேச்சுவார்த்தைக்குச் சென்ற நபர் சடலமாக மீட்பு

கன்னியாகுமரி: மைலோடு அருகே மடத்துவிளை பகுதியைச் சேர்தவர் சேவியர்குமார் (42). இவர் நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராகவும், கன்னியாகுமரி அரசுப் போக்குவரத்துப் பணிமனையில் மெக்கானிக்காகவும் பணியாற்றி வந்துள்ளார். மேலும், மயிலோடு புனித மிக்கோல் அதிதூதர் ஆலயத்திற்கு பங்குப் பேரவையின் பொருளாளராகவும் பணியாற்றி இருந்துள்ளார்.

மேலும், மயிலோடு ஆலயத்தில் பங்குத் தந்தையாகவும், பங்குப் பேரவையில் தலைவராகவும் ராபின்சன் என்பவர் இருந்து வருகிறார். தற்போது, பங்குப் பேரவையில் இருப்பவர்களுக்கும், ஏற்கனவே பங்குப் பேரவை நிர்வாகியாக இருந்த சேவியர் குமார் தரப்புக்கும் இடையே நிர்வாக ரீதியாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், தற்போதுள்ள பங்குப் பேரவை நிர்வாகத்திற்கு எதிராக சேவியர்குமார் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், மைலோடு பகுதியில் உள்ள புனித மிக்கோல் அதிதூதர் தேவாலயத்திற்குச் சொந்தமான மதர் தெரஸா பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் சேவியர்குமாரின் மனைவி ஜெமீலாவை பணியிடை நீக்கம் செய்து, சேவியர் குமாரை எச்சரித்துள்ளனர்.

இதனிடையே, நேற்று முன்தினம் (ஜன.19) ஜெமீலா தனது உறவினர்களுடன் பங்குத் தந்தை ராபின்சனைச் சந்தித்து, தனது ஆசிரியை பணியை மீண்டும் வழங்கும்படி கேட்டுள்ளார். தனது கணவர் சேவியர்குமார் இனி சமூக வலைத்தளங்களில் பதிவிட மாட்டார் என்று கூறியும் கூட, சேவியர்குமார் நேரில் வந்து எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டால்தான் வேலை தருவதாக மிரட்டியுள்ளார்.

அதன் பின்னர், நேற்று (ஜன.20) சேவியர்குமாரின் வீட்டிற்கு பாதிரியாருடன் வந்த வின்சென்ட் என்பவர், எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டால் வேலை கிடைக்க ஏற்பாடு செய்வதாகக் கூறியதை அடுத்து, சேவியர்குமார் மைலோடு தேவாலய வளாகத்தில் உள்ள பங்குத்தந்தை ராபின்சன் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது, பங்குத்தந்தை ராபின்சன் மற்றும் தற்போதைய பங்குப் பேரவை நிர்வாகிகளான தக்கலை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ரமேஷ் பாபு, அவரது சகோதரர் சுரேஷ், ஜெஸ்டஸ் ரோக் ஆகியோர் அங்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனை அடுத்து, பங்குத்தந்தை இல்லத்தில் சேவியர்குமார் இரத்தக் காயங்களுடன் பிணமாக கிடப்பது, அவரது மனைவி ஜெமீலாவுக்கு தெரிய வந்துள்ளது.

பின்னர், இச்சம்பவம் ஊர்மக்கள் மத்தியில் வேகமாக பரவியுள்ளது. குறிப்பாக, ஆலய வளாகத்தில் கூடியிருந்த சிலர், ஆலய மணியை அடித்தும், ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து கூறியதை அடுத்து, ஊர்மக்கள் மத்தியில் வேகமாக பரவியுள்ளது. அதனை அடுத்து, நாம் தமிழர் கட்சி தொண்டர்கள், ஊர்மக்கள் என ஏராளமானோர் தேவாலய வளாகத்தில் திரண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த இரணியல் போலீசார், குளச்சல் உதவி கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம், தக்கலை துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் உள்ளிட்ட காவல் அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், சேவியர்குமார் அயன் பாக்சால் தாக்கப்பட்டு மரணம் அடைந்திருக்கலாம் எனத் தெரிவித்தனர்.

மேலும், ஆலயப் பங்குப் பேரவை அலுவலகம், பங்குத்தந்தை இல்லம் ஆகிய இடங்களில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவின் டிவீஆர் பெட்டியையும் காணவில்லை என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. அதனையடுத்து, தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். இதனிடையே, பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பங்குத்தந்தை ராபின்சன், திமுக நிர்வாகி ரமேஷ் பாபு, சுரேஷ், ஜெஸ்டஸ் ரோக் ஆகியோர் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர், சேவியர் குமாரின் உடலை, உடற்கூராய்விற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர்மக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் காவல்துறை தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தன் பிறகு, நள்ளிரவு ஒரு மணி அளவில் சேவியர்குமாரின் உடலை போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் தொழிலதிபர் வீட்டில் 3வது நாளாக அமலாக்கத்துறை சோதனை! முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்!

Last Updated : Jan 21, 2024, 5:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.