ETV Bharat / state

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது! - POLICE ARRESTED IN POCSO CASE

நெல்லையில் போலீசார் ஒருவர் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2024, 5:04 PM IST

Updated : Oct 31, 2024, 5:11 PM IST

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது நபர், காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் தற்போது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும், நெல்லையைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, அவர் அந்த மாணவியின் வீட்டுக்குச் சென்று, அவரது பெற்றோருடன் சகஜமாக பழகி வந்துள்ளார். அந்த மாணவி வீட்டில் தனியாக இருக்கும்போதெல்லாம் அடிக்கடி அங்கு செல்லும் அவர், மாணவியிடம் ஆபாசமாக பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மாணவி குறித்த தனிப்பட்ட வீடியோக்களை தனக்கு வாட்ஸ் அப் மூலமாக அனுப்பச் சொல்லி உள்ளார். மாணவியும் தனது தனிப்பட்ட வீடியோக்களை அவருக்கு அனுப்பி உள்ளார். அதேநேரம், மாணவி வசதியான வீட்டைச் சேர்ந்தவர் என்பதால், அந்த வீடியோக்களை வைத்துக்கொண்டு, அவர் அந்த மாணவியை அடிக்கடி மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.

முதலில் பெற்றோருக்கு தெரியாமல் பணத்தைக் கொடுத்து வந்த மாணவி, ஒருகட்டத்தில் அவரின் தொந்தரவு தாங்க முடியாமல் தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களைத் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட காவலர் மாணவியை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்து உறுதியாகி உள்ளது. மேலும், மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் அக்காவலரைக் கைது செய்ய, போலீசார் அவரது வீட்டுக்குச் சென்றனர்.

அப்போது அவர் இரவுப் பணிக்குச் சென்றுவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதற்கிடையில், தனக்கு நெஞ்சு வலிப்பதாக அவர் கூறியுள்ளார். இதனையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில், இன்று அவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், சிறையில் அடைக்க கொண்டு செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Last Updated : Oct 31, 2024, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.