ETV Bharat / state

மூட்டை மூட்டையாக காரில் 'பாண்டி சாராயம்' - சுற்றிவளைத்த மயிலாடுதுறை போலீஸ்! - Mayiladuthurai liquor smuggling - MAYILADUTHURAI LIQUOR SMUGGLING

Mayiladuthurai liquor smuggling: காரைக்காலில் இருந்து மயிலாடுதுறைக்கு நள்ளிரவில் சொகுசு காரில் கடத்திவரப்பட்ட 900 லிட்டர் பாண்டி சாராயத்தை பறிமுதல் செய்த மதுவிலக்கு போலீசார், இரு நபர்களை கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

பறிமுதல் செய்யப்பட்ட சாராயம், கைதானவர்கள்
பறிமுதல் செய்யப்பட்ட சாராயம், கைதானவர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 6, 2024, 12:28 PM IST

மயிலாடுதுறை: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திலிருந்து சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில்கள் மற்றும் தடை செய்யப்பட்ட சாராயம் கடத்தி வந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுவதன் பேரில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின் பேரில் சாராய கடத்தலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காரைக்காலில் இருந்து காரில் நள்ளிரவில் பாண்டி சாராயம் கடத்தி வருவதாக மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் உத்தரவின் பேரில் மாவட்ட மதுவிலக்கு காவல் ஆய்வாளர் அன்னை அபிராமி தலைமையில், காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமை காவலர்கள் கரிகாலன், மகாலிங்கம், செந்தில்குமார், சிஐயூ கண்ணதாசன் ஆகியோர் செம்பனார்கோயில் காளகஸ்தினாதபுரம் பெட்ரோல் பங்க் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அதிவேகமாக வந்த ஒரு காரை போலீசார் நிறுத்தியபோது, கார் நிற்காமல் சென்றது. அந்த காரில் தடை செய்யப்பட்ட சாராயம் கடத்திக்கொண்டு செல்லலாம் என சந்தேகமடைந்த போலீசார், நிற்காமல் சென்ற காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். இதனால் காரை நிறுத்திய ஓட்டுநர் தப்பி ஓடினார். போலீசார் காரை சோதனை செய்ததில் 18 சாக்கு மூட்டைகளில் 900 லிட்டர் பாண்டி சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது.

உடனடியாக காரையும், சாராயத்தையும் பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த மற்றொரு நபரையும், தப்பி ஓடிய நபரையும் விரட்டி பிடித்து மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் ஆயப்பாடியை சேர்ந்த டிரைவர் சுமன் மற்றும் திருக்களாச்சேரியைச் சேர்ந்த முருகேசன் என்றும், இவர்கள் இருவரும் காரைக்காலில் இருந்து மயிலாடுதுறைக்கு சாராயத்தை கடத்தி வந்தவுடன் சாராய வியாபாரி தொடர்பு கொண்டு சாராயத்தை பெற்று செல்வார் என்று தெரிவித்தனர்.

இதனை அடுத்து இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த சாராய வியாபாரி யார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: “வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்வது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது” - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! - Madras High Court

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.