ETV Bharat / state

'யார் பெரிய ரவுடி?'.. தஞ்சையை உலுக்கிய கொலை வழக்கில் 7 பேர் கைது! - thanjavur rowdy murder case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

தஞ்சையில் யார் பெரிய ரவுடி என்பதில் ஏற்பட்ட தகராறில், இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஏழு பேர்
கைது செய்யப்பட்ட ஏழு பேர் (credit - ETV Bharat Tamil Nadu)

தஞ்சாவூர்: தஞ்சை அடுத்த கரந்தை மிளகுமாரிச்செட்டித் தெருவை சேர்ந்தவர் அறிக்கி என்ற அறிவழகன் (33). இவர் தஞ்சை மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழில் செய்து வந்தார். இவர் மீது கொலை, கஞ்சா, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி அறிவழகன் வீட்டில் இருந்தபோது, நண்பர்கள் வந்து அவரை வெளியில் அழைத்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து, அவர் தனது நண்பர்களுடன் சென்று அருகில் உள்ள புற்று மாரியம்மன் கோவில் தெருவில் இருக்கும் வடவாறு ஆற்று படித்துறையில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அறிவழகனை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

அப்போது, அவர்களிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற அவரை, அந்த கும்பல் தலை, கை உள்ளிட்ட இடங்களிலும் வெட்டியுள்ளனர். இதில் அறிவழகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதையும் படிங்க: சென்னையில் மூதாட்டியிடம் 15 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது!

இது குறித்து வழக்குப் பதிவு செய்த கிழக்கு காவல்துறையினர், 6 நாட்களுக்குப் பிறகு திவாகர் (24), பார்த்திபன் (24), ஷ்யாம் (21), திலீப்குமார் (21), செல்வகுமார் (23), ஹரிஹரன் (24) மற்றும் கந்தவேல் (29) ஆகிய ஏழு பேரை கைது செய்துள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்நியன் என்ற திவாகருக்கும், அறிவழகனுக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.

மேலும், ஏரியாவில் யார் பெரிய ரவுடி என்ற போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பவத்தன்று பிற்பகல் திவாகரை அறிவழகன் மற்றும் அவரது கூட்டாளிகள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த திவாகர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அறிவழகனை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.