ETV Bharat / state

ரூ.6.5 கோடி போலி 500 ரூபாய் நோட்டு.. கோவையில் அரங்கேறிய மோசடி! - COIMBATORE MONEY FRAUD ISSUE

கோயம்புத்தூரில் குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக கூறி ரூ.6.5 கோடி போலி 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட வீரமணி மற்றும் கைப்பற்றப்பட்ட போலி பணம்
கைது செய்யப்பட்ட வீரமணி மற்றும் கைப்பற்றப்பட்ட போலி பணம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 9, 2024, 1:19 PM IST

கோயம்புத்தூர்: குறைந்த வட்டிக்கு கோடிக்கணக்கில் பணம் வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில், ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக, ரூ.6.5 கோடி மதிப்பிலான போலி நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ள நிலையில், இந்த மோசடியில் தலைமறைவாக உள்ள பெண்ணை தேடி வருகின்றனர்.

இது குறித்து பேசிய போலீசார், "சூலூர் பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் சுகந்தி. இவர் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் நடத்தி வரும் நிலையில், மகளிருக்கு தொழில் ஆலோசனைகள் வழங்குவது, வங்கிகளில் கடன் பெற்று கொடுப்பது உள்ளிட்ட பணிகளையும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், வர்கீஸ் என்பவர் மூலமாக இவருக்கு செலக்கரிச்சல் கிராமத்தைச் சேர்ந்த விஜயா என்பவர் அறிமுகமாகி, 50 பைசா வட்டிக்கு கோடிக்கணக்கில் பணம் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

இதை நம்பி சுகந்தி ஆரம்பத்தில், ரூ.50 ஆயிரம், ஒரு லட்சம் கடன் வாங்கியுள்ளார். தொடர்ந்து கடந்த வருடம் வர்கீஸ் இறந்த நிலையில், அவர் நடத்திய அறக்கட்டளைக்கு தலைவராக பதவியேற்றுள்ளதாக விஜயா அனைவரிடமும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சுய உதவிக் குழுக்களை அணுகி மாற்றுத்திறனாளிகளுக்கு கோடிக்கணக்கில் குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக கூறியுள்ளார்.

மேலும், இது தொடர்பாக முன்பணமாக 3 பேரிடம் ரூ.15 லட்சம் பெற்றுள்ளார். இதனையடுத்து, பணம் கொடுத்து 2 மாதங்களான நிலையில் சுகந்தியை தொடர்பு கொண்டு, உங்களுக்கு ரூ.6.5 கோடி பணம் வந்துள்ளாதாக விஜயா தெரிவித்துள்ளார். மேலும், பணத்தைப் பெற்று தருவதற்கு ஒரு சதவீதம் கமிஷனாக, ரூ.6.5 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும் கூறியதாக சுகந்தி தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: போலி கணக்கு எழுதி லட்சக்கணக்கில் கையாடல் செய்த பெண் கணக்காளர்! சிக்கியது எப்படி?

இதில், பணத்தை பார்க்க வேண்டும் என சுகந்தி தரப்பினர் கூறவே, அவர்களை பழனிக்கு வரவழைத்து காருக்குள் கட்டு கட்டாக பணம் இருந்ததை காண்பித்துள்ளனர். இதனை நம்பி சுகந்தி தரப்பினர் ரூ.3 லட்சம் கொடுப்பதாகவும், ரூ. 6.5 கோடி பணம் கையில் கிடைத்தவுடன் மீதி பணத்தை தருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, விஜயா தரப்பில், காரைக்குடியைச் சேர்ந்த வீரமணி என்பவர் மூலமாக பணம் கொடுத்து அனுப்பப்பட்டுள்ளது.

போலி நோட்டுக்கள்: பணத்தை வீட்டில் வைத்து வீட்டை இரண்டு பூட்டுகளை கொண்டு பூட்டி ஒரு சாவியை சுகந்தி தரபினரிடம் வழங்கிவிட்டு, மற்றொரு சாவியை எடுத்துக்கொண்டு வீரமணி செறுள்ளதாக சுகந்தி தரப்பினர் கூறியுள்ளனர். இதில், சந்தேகமடைந்த சுகந்தி தரப்பினர், அவர்களிடமிருந்த சாவியால பணம் வைக்கப்பட்டிருந்த அறையை திறந்து பார்த்துள்ளனர். அப்போது, அங்கு 500 ரூபாய் சாயலில் போலி தாள்கள் அடங்கிய கட்டுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, தாம் ஏமாற்றமடைந்ததை அறிந்த சுகந்தி தரப்பினர், விஜயா மீது சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்,"என்றனர்.

புகாரின் பேரில், போலீசார் ஆலோசனை வழங்கியுள்ளனர். அதில், மீதமுள்ள கமிஷன் தொகையை தருவதாக விஜயாவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் நேற்று (டிச.08) ஞாயிற்றுக்கிழமை காலை, விஜயாவின் ஏஜென்ட் வீரமணி பணத்தை வாங்கிச் செல்வதற்காக வந்துள்ளார். அங்கு வந்த வீரமணியை அறைக்குள் விட்டு பூட்டு போட்ட சுகந்தி தரப்பினர், அவரை பிடித்து சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

வீரமணியிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதில், “இந்த சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது. தன்னிடம் விஜயா இந்த பணம் பண்டலை சுகந்தியிடம் கொடுத்துவிட்டு வர சொன்னார். அதற்காக 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுப்பதாக கூறினார்” என்ரு கூறியுள்ளார். இதனையடுத்து, போலீசார் விஜயாவை தொடர்பு கொள்ள போலீஸர் முயற்சித்தபோது அவர் தலைமறைவானது தெரியவந்துள்ளது. பின்னர், விஜயா மற்றும் வீரமணி மீது வழக்கு பதிவு செய்த போலீசார், வீரமணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து, தலை மறைவாக உள்ள விஜயாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.