ETV Bharat / state

போதைப் பொருள் விற்பனை; பெண் உள்பட 5 பேர் கைது! - METHAMPHETAMINE DRUG SALES

சென்னையில் இளைஞர்களை குறி வைத்து மெத்தபெட்டமைன் போதை பொருட்களை விற்பனை செய்து வந்த விவகாரத்தில் பெண் மற்றும் 2 சிறுவர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2024, 11:14 AM IST

சென்னை: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து பல்வேறு நபர்கள் கைது செய்து வருவது தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இதனால், போதை பொருள் புழக்கத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு உருவாக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (நவ.06) இரவு உயர் நீதிமன்றம் அருகே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமாக இரண்டு டூவீலர்களில் வந்த ஒரு பெண் உட்பட ஐந்து பேரை மடக்கி பிடித்து விசாரணை செய்துள்ளனர். அதில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தில் வந்த ஐந்து பேரையும் எஸ்பிளனேடு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில், பெண் சிறுவர்களை உடன் வைத்துக்கொண்டு கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்கள், பப்புகளுக்கு செல்லும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை குறி வைத்து மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட மணலி பகுதியைச் சேர்ந்த பாத்திமா மௌபியா (25), கொடுங்கையூரைச் சேர்ந்த தினேஷ்(23), புழல் பகுதியைச் சேர்ந்த பிரவீன் (20) மாரும் 2 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னை டிராபிக் போலீசிடம் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞர்கள்... விசாரணையில் அடுத்தடுத்து 6 பேர் கைது..!

மேலும், பாத்திமா மௌபியா தந்தை அக்பர் அலி போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அக்பர் அலி சிறையில் இருப்பதால் அவரது மகள் பாத்திமா மௌபியா போதைப்பொருள் விற்பனை செய்யும் கூட்டாளிகளுடன் இணைந்து, சிறுவர்கள் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, பார்த்திமா மௌபியாவுடன் மேலும் சிலர் தொடர்பில் இருக்கலாம் என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து ஏழு கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுவர்களை வைத்து போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் தலைமையிலான கும்பலை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.