ETV Bharat / state

தேனியில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பறந்த தேசிய கொடியால் பரபரப்பு! - Vinayagar rally in theni

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2024, 9:54 PM IST

Vinayagar rally in theni: தேனியில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலத்தில் தேசிய கொடியைப் பயன்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விநாயகர் சிலை ஊர்வலத்தில் தேசிய கொடி
விநாயகர் சிலை ஊர்வலத்தில் தேசிய கொடி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

தேனி: விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து எழுச்சி முன்னணி சார்பில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் இருந்து அல்லிநகரம், பழைய பேருந்து நிலையம், பங்களாமேடு வழியாக அரண்மனை புதூரில் உள்ள முல்லைப் பெரியாற்றில் கரைத்தனர்.

தேனியில் விநாயகர் சிலை ஊர்வலம் (Video Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த ஊர்வலத்தில், நூற்றிற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை இளைஞர்கள் ஆடிப்பாடி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்போது ஊர்வலத்தில் விநாயகர் சிலையை ஏற்றி வந்த வாகனத்தில், தேசியக் கொடியை கட்டியுள்ளனர்.

இதனால், போலீசார் தேசிய கொடியை அகற்றும் படி இளைஞர்களிடம் கூறியுள்ளார். ஆனால், இளைஞர்கள் தேசிய கொடியை அகற்ற மறுத்து வாகனத்தை இயக்கிச் சென்றுள்ளனர். இதனால், போலீசாருக்கும் ஊர்வலத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, போலீசார் அந்த வாகனத்தை தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர். தொடர்ந்து, விநாயகர் சிலையை முல்லைப் பெரியாற்றில் கரைத்ததற்கு பின்னர் தேசிய கொடியை அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஊர்வலத்தில் தள்ளுமுள்ளு: அதேபோல், ஆண்டிப்பட்டி நகரில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து ஆற்றில் கரைப்பதற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் சுமார் 100 இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தி முடிவடைந்த நிலையில், சிலைகளை வைகை அணையில் கரைப்பதற்காக அனைத்து சிலைகளும் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி பகுதிக்கு கொண்டுவரப்பட்டது.

இதில், இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சியினர் இடையே யார் முந்தி செல்வது என போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால், இருதரப்பினருக்கும் இடையில் தள்ளுமுல்லு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, போலீசார் இரு அமைப்பு நிர்வாகிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இந்து அமைப்பினர்கள் தேனி - மதுரை சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். அதன் பின்னர் இந்து அமைப்பினர் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் ஆண்டிப்பட்டி நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து, இந்து முன்னணி மற்றும் இந்து எழுச்சியினர் சார்பில் நடத்தப்பட்ட ஊர்வலத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி சுமந்து கொண்டும், சிறிய அளவிலான விநாயகரை தலையில் வைத்துக் கொண்டும் தேவராட்டம், செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக சென்றனர். பின்னர் அரண்மனைபுதூர் பெரியாற்றில் விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்கப்பட்டது. இதில், தேனி டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: போலீசார் தடையை மீறி விநாயகர் சிலை கரைப்பு..தேனியில் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.