ETV Bharat / state

திருவண்ணாமலையில் காணாமல் போன ஜப்பான் பக்தர்.. தேடுதல் பணி தீவிரம்! - Japanese missing in Tiruvannamalai

Missing Japanese person: திருவண்ணாமலைக்கு வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் காணாமல் போனதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் நகர காவல் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

காணாமல் போன ஜப்பான் நாட்டைச் சார்ந்தவர்
காணாமல் போன ஜப்பான் நாட்டைச் சார்ந்தவர் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 8:06 PM IST

திருவண்ணாமலை: உலக பிரசித்தி பெற்ற ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் திருவண்ணாமலை மலை மீது அனுமதிக்கப்பட்ட பகுதியில் நாட்கள் கணக்கில் தியானம் மேற்கொள்வார்கள்.

அந்த வகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சடோஷி மினெட்டா (62) (Satoshi Mineta) என்பவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக திருவண்ணாமலைக்கு வந்ததாக கூறப்படுகிறது. இவர் கிரிவலப்பாதையில் உள்ள ஆசிரம விடுதி ஒன்றில் தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், மே 5ஆம் தேதி மாலை விடுதியில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, இது குறித்து திருவண்ணாமலை நகர போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில், அந்த நபர் வேறு ஏதேனும் சுற்றுலாத் தலங்களுக்கு சென்றுள்ளாரா? எங்கே சென்றிருப்பார்? என்ற பல்வேறு கோணங்களின் அடிப்படையில் கடந்த இரண்டு மாதங்களாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ஆனால், இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், திருவண்ணாமலையில் தொலைந்து போன ஜப்பான் நாட்டைச் சார்ந்தவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில், தற்போது அந்த நபர் திருவண்ணாமலை மலை மீது சென்று தியானம் மேற்கொள்ள சென்றாரா? மீண்டும் திரும்பி வர வழி தெரியாமல் மழையில் எங்கேனும் சிக்கியுள்ளாரா? என்ற கோணத்தில் போலீசார் மலை ஏறும் நபர்களைக் கொண்டு தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 287 ஆக உயர்வு.. கேரளாவுக்கு விரையும் தேசிய தலைவர்கள் - Wayanad landslides

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.