ETV Bharat / state

திருப்பத்தூர் அருகே லாரி டிரைவரை தாக்கி பணம் பறித்த கும்பல்.. போலீசார் தீவிர விசாரணை! - highway robbery - HIGHWAY ROBBERY

Lorry Driver Attack: திருப்பத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் லாரி டிரைவரை அரை நிர்வாணமாக்கி பணம் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர்
திருப்பத்தூர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 6, 2024, 5:14 PM IST

திருப்பத்தூர்: சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(33). இவர் சேலம் பகுதியில் இருந்து வெங்கட்டகிரி பகுதியில் மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் சுங்கச்சாவடி அருகே வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக கோவிந்தராஜ் சென்று உள்ளார்.

இதனைக் கண்காணித்த இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தியால் கோவிந்தராஜின் கையை வெட்டி உள்ளனர். மேலும், அவரது சட்டையைக் கழற்றச் சொல்லி அரை நிர்வாணமாக்கி அவரிடம் இருந்த பணத்தைக் கேட்டுள்ளனர். பதற்றம் அடைந்த கோவிந்தராஜன் தன்னிடம் இருந்த 7,000 ரூபாய் பணத்தையும் செல்போனையும் மர்ம கும்பலிடம் கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பணத்தைப் பெற்றுக்கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் கோவிந்தராஜ் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கோவிந்தராஜுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து விட்டுச் சென்று உள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்த நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் விரைந்து வந்த போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் லாரி டிரைவரை அரை நிர்வாணமாக்கி பணம் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: விடாமுயற்சி அப்டேட் வீடியோ.. கோவை காவல்துறைனர் வெளியிட்ட முக்கிய பதிவு! - AJITH CAR STUNT

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.