ETV Bharat / state

தருமபுரி மக்களவை தொகுதி: வாக்கு வங்கியை தக்க வைத்த பாமக! - கோட்டையை திமுகவிடம் பறிகொடுத்த அதிமுக! - DHARMAPURI ELECTION RESULTS 2024 - DHARMAPURI ELECTION RESULTS 2024

Lok Sabha Election results 2024 Dharmapuri: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தருமபுரி தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி 21,300 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.மணி வெற்றி பெற்றார். அதிமுக இத்தொகுதியில் தமது வாக்கு வங்கியை இழந்துள்ளது.

தருமபுரி மக்களவைத் தொகுதியில் தலைவர்கள் பிரச்சாரம் (கோப்புப்படம்)
தருமபுரி மக்களவைத் தொகுதியில் தலைவர்கள் பிரச்சாரம் (கோப்புப்படம்) (Image Credit - Etv Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 6, 2024, 5:20 PM IST

Updated : Jun 6, 2024, 6:08 PM IST

தருமபுரி: தருமபுரி தொகுதியில் 2019 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி முதல் 9 சுற்றுகள் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் முன்னிலை பெற்று வந்தார். அதற்கு பின்பு எண்ணப்பட்ட வாக்குகளில் திமுக வேட்பாளர் மருத்துவர் செந்தில்குமார் வெற்றி பெற்றார். இம்முறையும் 9வது சுற்று வரை தொடர்ந்து பாமக முன்னிலையில் இருந்தது. இதன் காரணமாக சௌமியா அன்புமணி வெற்றி பெறுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 13 வது சுற்றில் இருந்து சௌமியா அன்புமணி பின்னடைவை சந்திக்க, திமுக வேட்பாளர் ஆ.மணி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதற்கு அரூர், பாலக்கோடு மற்றும் மேட்டூர் சட்டமன்றத் தொகுதிகளில் அதிக அளவு வாக்குகள் திமுகவிற்கு விழுந்ததுதான் காரணம்.

அதேசமயம் தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளில் அதிகளவு சௌமியா அன்புமணிக்கு விழுந்திருந்தன. இருப்பினும் சௌமியா அன்புமணி பெற்ற் வாக்குகளைவிட அதிகமான வாக்குகள் பாலக்கோடு, அரூர், மேட்டூர் தொகுதிகளில் திமுகவிற்கு கிடைத்ததால் கடைசி 11 சுற்றில் திமுக முன்னிலை பெற்று இறுதியில் வெற்றி பெற்றது.

வழக்கமாக அரூர் தொகுதி திமுகவிற்கு அதிக வாக்கு வங்கியை கொண்டுள்ள தொகுதியாகவும், அதேபோல் மேட்டூர் பாமக சட்டமன்ற தொகுதியாகவும், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி அதிமுகவின் கோட்டையாகவும் இருந்து வருகிறது. குறிப்பாக பாலக்கோட்டில் அதிமுகவை சேர்ந்த கேபி அன்பழகன் தொடர்ந்து வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் பாலக்கோடு தொகுதியில் அதிமுகவிற்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு திமுகவிற்கு அதிக அளவு வாக்குகள் கிடைத்தது. இத்தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ. மணிக்கு 71,344 வாக்குகளும், பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கு 60 ஆயிரத்து 878 வாக்குகளும், அதிமுக சார்பில் போட்டியிட்ட அசோகனுக்கு 53 ஆயிரத்து 607 வாக்குகளும் கிடைத்தன.

இதையும் படிங்க: தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024, தருமபுரி தொகுதி:இருமுனைப் போட்டியில் வெல்லப் போவது யார்?

பாலக்கோட்டில் எம்எல்ஏவை கொண்டுள்ள அதிமுகவே இந்த தொகுதியில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கு பாமக இரண்டாவது இடத்திலும், திமுக அதிக வாக்குகள் பெற்று வெற்றியும் பெற்றுள்ளது. பாலக்கோடு தொகுதியில் திமுகவை விட அதிமுக 18 ஆயிரத்து 737 வாக்குகள் குறைவாகவே பெற்றுள்ளது.

அரூர் சட்டமன்றத் தொகுதி வழக்கமாக அதிமுக மற்றும் திமுகவிற்கு சாதகமான தொகுதி. அங்கு பாட்டாளி மக்கள் கட்சிக்கு 40 ஆயிரம் வாக்குகள் அளவிலே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அத்தொகுதியில் சௌமியா அன்புமணிக்கு 46 ஆயிரத்து 175 வாக்குகள் கிடைத்துள்ளன. மேலும், அதிமுக வேட்பாளர் அசோகனுக்கு 47641 வாக்குகளும், திமுக வேட்பாளர் மணிக்கு 85 ஆயிரத்து 850 வாக்குகளும் கிடைத்துள்ளன.

கோட்டை விட்ட பாமக: அரூா் சட்டபேரவை தொகுதியை பொருத்தவரை, பட்டியல் சமூக மக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வாக்குகள் அதிக அளவு திமுக வேட்பாளர் மணிக்கு சாதகமாக வாக்களித்துள்ளதாக தெரிகிறது. அதனால்தான், பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை விட 21300 வாக்குகள் அதிகம் பெற்று ஆ.மணி வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக, மற்ற ஐந்து தொகுதிகளைவிட அரூர் தொகுதியில் பெற்ற வாக்குகள்தான் திமுக வேட்பாளர் வெற்றிக்கு கை கொடுத்துள்ளது.

அரூர் சட்டமன்ற தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் பணியில் பாமக சற்று கோட்டைவிட்டது என்றே சொல்லலாம். மேலும் அரூா் தொகுதியை பொருத்தவரை கொங்கு சமுதாய மக்கள் நிறைந்துள்ள பகுதியாக உள்ளது. கொங்கு சமுதாய மக்களின் வாக்குகளை பெற முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பம்பரமாக சுழன்று வேலை செய்தார். அதன் காரணமாக பழனியப்பனின் சமுதாய வாக்குகள் பெருமளவு திமுகவிற்கு சாதகமாக அமைந்து அக்கட்சியை வெற்றி வாகை சூட வைத்துள்ளது.

இதையும் படிங்க: "காசேதான் கடவுளடா" வாக்கு செலுத்திய பின் பாட்டு பாடிய பாமக நிறுவனர் ராமதாஸ்!

மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் பாமகவின் சதாசிவம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இத்தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ. மணி 67824 வாக்குகளும், சௌமியா அன்புமணி 63,265 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் அசோகன் 56 ஆயிரத்து 444 நாட்களும் பெற்றனர்.

மேட்டூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ. மணி 4569 வாக்குகள் அதிகம் பெற்றார். அவர் பாலக்கோடு, அரூர் மற்றும் மேட்டூர் தொகுதியில் முன்னிலை பெற்றிருந்தார். பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் தொகுதியில் முன்னிலை பெற்றிருந்தார். இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களும் ஆறு சட்டமன்றத் தொகுதிகளில், தலா மூன்று தொகுதிகளில் முன்னிலை பெற்றாலும் அரூர் தொகுதியில் விழுந்த வாக்குகள் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது.

2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக தருமபுரி, பென்னாகரம், மேட்டூர் தொகுதிகளிலும், அதிமுக பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தொகுதிகளிலும் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை பொறுத்தவரை, தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுகவின் கை ஓங்கி உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி தனது வாக்கு வங்கியை தக்க வைத்துள்ளது. அதிமுக வாக்கு வங்கியிலும் இங்கு கோட்டைவிட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரை தொகுதியில் அதிமுக தனது செல்வாக்கை இழக்க காரணம் என்ன? - சிறப்பு அலசல்

Last Updated : Jun 6, 2024, 6:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.