ETV Bharat / state

திருவண்ணாமலை அருகே அக்னி குண்டம் அமைத்த பாமகவினர் கைது! - Agni Gundam issue

PMK party Agni Gundam issue: திருவண்ணாமலை மாவட்டம், நாயுடுமங்கலம் அருகே வன்னியர் சங்கத்தின் சின்னமான அக்னி குண்டத்தை அமைத்து கோஷங்களை எழுப்பிய நிலையில், அக்னி குண்டத்தை வைத்த பாமகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 10, 2024, 4:25 PM IST

திருவண்ணாமலை அருகே அக்னி குண்டம் சின்னத்தை அமைத்த பாமகவினர் கைது!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை - வேலூர் செல்லும் சாலையில் உள்ளது, நாயுடுமங்கலம் கூட்ரோடு. இங்கு நெடுஞ்சாலை ஓரமாக வன்னியர் சங்கம் சார்பில் அக்னி குண்டம் வைக்கப்பட்டிருந்தது. இந்த அக்னி குண்டத்தை, 1989ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி வன்னியர் சங்க நிறுவனத் தலைவர் ராமதாஸ் திறந்து வைத்தார்.

இதையடுத்து, சாலை விரிவாக்கத்திற்காகவும், பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என்பதற்காகவும், பொதுமக்களின் நலன் கருதி அந்த அக்னி குண்டத்தை வேறு இடத்துக்கு மாற்றிக்கொள்ளும் பொருட்டு, தற்காலிகமாக அகற்றிக் கொள்ளப்பட்டது. அதன்படிம் அதிகாரிகள் ஒதுக்கி தந்த பேருந்து நிலையம் பக்கத்தில் உள்ள இடத்தில் அந்த அக்னி குண்டம் நிறுவப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அந்த அக்னி குண்டத்தை அகற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புகார் தெரிவித்தனர். அதன் பேரில், அக்னி குண்டத்தை அகற்றும்படி அதிகாரிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அப்போதைய மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டார்.

அதன்படி, போலீசாரின் துணையுடன் அக்னி குண்டத்தை அகற்றுவதற்கான முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதைக் கேள்விப்பட்டதும் பாட்டாளி மக்கள் கட்சியினர், நாயுடுமங்கலம் கூட்ரோடு அருகே திரண்டு பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இருப்பினும், அந்த அக்னி குண்டத்தை வருவாய்த் துறையினர் அகற்றி, கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்தனர். பலமுறை அந்த அக்னி குண்டத்தை அந்த பகுதியில் நிறுவ அனுமதி கேட்டும் மாவட்ட நிர்வாகம் மறுத்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (மார்ச் 10) அதிகாலையில், நாயுடுமங்கலம் கூட்டுச்சாலையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாமக செயலாளர் பக்தவச்சலம் தலைமையில் திரண்ட பாமகவினர், புதிதாக செய்யப்பட்ட வன்னியர் சங்கத்தின் சின்னமான அக்னி குண்டத்தை அங்கு அமைத்து, அதற்கு மாலையிட்டு கோஷங்களை எழுப்பினர்.

இதனை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, புதிதாக அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தை அங்கு இருந்து அகற்றி, அக்னி குண்டத்தை வைத்த 20க்கும் மேற்பட்ட பாமகவினரை கைது செய்து, போளூர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில், 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: இந்தியாவை பொருத்தவரையில் பாஜக தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறது - கி.வீரமணி விமர்சனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.