ETV Bharat / state

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; பாமக வேட்பாளர் யார்? அன்புமணி ராமதாஸ் பதில் என்ன? - Vikravandi by election

Vikravandi by election PMK candidate: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளர் குறித்து, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோப்புப்படம்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 13, 2024, 5:25 PM IST

விழுப்புரம்: திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தியின் மறைவைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை வேட்பாளராக அறிவித்து, தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது.

இந்த நிலையில், பாமக சார்பில் வேட்பாளர் குறித்த ஆலோசனைக் கூட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

இதனிடையே, வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்க உள்ளதால், பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கட்சி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை செய்து முடிவுகளைத் தெரிவிப்போம்" எனத் தெரிவித்தார்.

முன்னதாக, இன்று தைலாபுரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் மாநில நிர்வாகிகளான வடிவேல் ராவணன், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாட்டாளி மக்கள் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிட்டால், அக்கட்சியின் விழுப்புரம் மாவட்ட முன்னாள் செயலாளரான அன்புமணி அல்லது பாமக விழுப்புரம் மாவட்ட தலைவர் தங்கஜோதி அல்லது விழுப்புரம் மாவட்ட முன்னாள் செயலாளர் புகழேந்தி அல்லது வழக்கறிஞர் பாலு போன்றவர்களுள் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக பாமகவினர் தரப்பில் பேசப்படுகிறது.

இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் சென்றால் பறிமுதல் - ஆட்சியர் எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.