ETV Bharat / state

"மும்மூர்த்திகளிடம் கேட்கும் வரங்கள்" -'போர்கள் ஓய்வதில்லை' நூல் வெளியீட்டு விழாவில் பட்டியலிட்ட ராமதாஸ்! - RAMADOSS

"மும்மூர்த்திகள் என்னிடம் வந்து என்ன வரம் வேண்டுமென கேட்டால், ஒரு சொட்டு மது இல்லாத தமிழ்நாடு, ஒரு சொட்டு நீர் கடலுக்கு செல்லக்கூடாது என்பதை வரமாக கேட்பேன்" என்றார் ராமதாஸ்.

'போர்கள் ஓய்வதில்லை' புத்தக வெளியீட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ்
'போர்கள் ஓய்வதில்லை' புத்தக வெளியீட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் (Credits - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2024, 9:01 PM IST

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதிய 'போர்கள் ஓய்வதில்லை' நூல் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. நூலை வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் நிறுவனர் விசுவநாதன் வெளியிட விஜிபி குழும தலைவர் வி.ஜி.சந்தோசம் பெற்றுக் கொண்டார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "ராமதாஸ் குறித்து இந்த நூலில் 10 சதவிகிதமே இருக்கிறது. மீதம் 90 சதவிகித பணிகளை பேச நேரமே போதாது. பெரியாரைப் போன்ற சமூக சீர்திருத்த குணம் கொண்டவர் ராமதாஸ்.

நூல் வெளியீட்டு விழாவில் பேசும் அன்புமணி ராமதாஸ் (Credits - ETV Bharat Tamilnadu)

காந்தி, ஜெயபிரகாஷ் நாராயணன் போன்றவர்களை தொடர்ந்து ராமதாஸ் பதவி, பொறுப்பு வேண்டாம் என கூறி சீர்திருத்தங்களை செய்து வருகிறார். தமிழ், இசை, விவசாயம், அரசியல் சார்ந்த 19 நூல்களை ராமதாஸ் எழுதி இருக்கிறார். இன்று வெளியீடு செய்யப்பட்டிருக்கும் 'போர்கள் ஓய்வதில்லை' நூல் அவரின் 20வது நூல். தமிழை வைத்து தான் ஆட்சிக்கு வருகின்றனர். எங்கும், எதிலும் தமிழ் என்கின்றனர். ஆனாலும் எதிலும் தமிழ் இல்லை.

இலங்கை மக்களுக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போராட்டமாக செய்து வருகிறார். மற்றவர்கள் இதனை வியாபாரமாக செய்து வருகின்றனர். மது ஒழிப்பு போராட்டங்களை இந்தியாவில் ராமதாஸை விட யாரும் பெரிதாக செய்ததில்லை. பெயரளவில் பல கழகங்கள் மது ஒழிப்பை கொள்கையாக வைத்து இருக்கின்றனர்.

சமீபத்தில், தமிழிசை சௌந்தரராஜனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய போது அருகில் இருந்த அவரது தந்தை குமரி ஆனந்தன், மதுவை எப்படியாவது ஒழித்துவிடுங்கள் என்றார். இந்தியாவில் சமூக நீதி என்பதற்கு மறு பெயர் ராமதாஸ். இந்த புத்தகத்தை படித்தாலே அது புரியும். 40 ஆண்டுகளுக்கு முன்பு புத்தகங்கள் மூலமாக ராமதாஸ் சொல்லிய சீர்த்திருத்தங்கள் இன்றளவிலும் நடைமுறையில் இல்லை.

ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ எந்த துறையிலாவது, இந்த நூலில் உள்ள சாதனைகளில் ஒன்றையாவது செய்துள்ளனரா? கேட்டால் இந்த மாடல், அந்த மாடல் என கூறுவர். பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் அளித்தால் அவர்கள் வாழ்வு மாறிவிடுமா? 108 ஆம்புலன்ஸ் சேவை கொண்டு வந்தது நாம்தான். அதில் அதிகம் பயன்பட்டது மகப்பேறு காலத்தில் உள்ள பெண்கள்.

இவைதான் மக்கள் வாழ்வை மாற்றும் திட்டங்கள். மாதம் ஆயிரம் ரூபாய் சொந்த பணத்தையா அளிக்கின்றனர். அரசின் வரிப்பணத்தைதானே கொடுத்தீர்கள். மதுக்கடைகளை மூடினாலே பெண்கள் மகிழ்ச்சியாகவும், சட்ட ஒழுங்கு சரியாகவும் இருக்கும். கிராமத்தில் உள்ள சாதாரண மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்க வேண்டும். மதுக்கடையை மூட வேண்டும். போதையை ஒழிக்க வேண்டும். விவசாயத்தை பெருக்கி, விவசாய நிலத்தை மேம்படுத்த வேண்டும்.

இதையும் படிங்க : ஒரே நாடு ஒரே தேர்தல்; "இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் நடவடிக்கை" - கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டறிக்கை!

நீர் மேலாண்மை செய்ய வேண்டும். இது போன்ற திட்டங்களில் ஈடுபட எவ்வளவோ சொல்லியும் செய்யவில்லை.
மத்திய அமைச்சரவையில் பாமகவை சேர்த்தபோது தலித் எழில்மலைக்கு அமைச்சர் பதவி கொடுத்தது பாமக. ஆனால் பாமகவை சாதிக்கட்சி என்பார்கள். அம்பேத்கர் தேசிய தலைவர். பன்முக திறன் கொண்டவர். காந்தியை போன்ற தலைவர்.

ஆனால், இன்று பட்டியலின தலைவர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். அதே போன்றவர் தான் ராமதாஸ். ஆனாலும் அவரை சாதி தலைவர் என்கின்றனர். அரசியல் ஆதாயத்திற்காக ராமதாஸை சாதி தலைவர் என்கின்றனர். அவர் கட்சியும், அவரும் வளரக்கூடாது என நினைக்கின்றனர்.

ராமதாஸ் ஒரு சமூக சீர்திருத்தவாதி என்பதால் அவருக்கு அவ்வளவு மரியாதை. மத்திய அமைச்சர்கள், ராம் விலாஸ் பஸ்வான் போன்ற தலித் தலைவர்கள் ராமதாஸ்க்கு அவ்வளவு மரியாதை அளிப்பார்கள். அத்தகைய ராமதாஸை தற்போது வேலையில்லை என ஒருவர் கூறுகிறார்.

ஆனால், ராமதாஸை ஒரு சாதி தலைவராகவும், பாமகவை வன்னியர் கட்சியாகவும் சுருக்கி விட்டனர். சமூகநீதியை மேடைபோட்டு பேசாமல், அதனை அமல்படுத்த வேண்டும் என்றுதான் ராமதாஸ் கூறுகிறார்.
கடந்த 25 ஆண்டுகளாக கல்வியில் வட ஆற்காடு, தென் ஆற்காடு, சேலம் ஆகிய மாவட்டங்கள் பின்தங்கி உள்ளன.

சமூகத்திற்காக 34 அமைப்புகளை உருவாக்கி இருக்கிறார். 90 ஆவணங்களையும் வெளியிட்டு இருக்கிறார். வேறு மாநிலத்தில் ராமதாஸ் பிறந்திருந்தால் உலக தலைவர் என்கிற அங்கீகாரம் கிடைத்திருக்கும். அங்கீகாரம் என்பது அவரது விருப்பமில்லை. ஆனால், அது எங்களின் ஏக்கம். ராமதாஸை பாராட்ட வேண்டாம். ஆனால், அவரை கொச்சைப்படுத்தாதீர்கள்.

வட மாவட்டங்களில் இருந்த வன்முறை குறைய காரணம் ராமதாஸ். இதையும் அரசியல் ஆதாயம் கொண்டு அனைவரையும் ஒன்றிணைத்து செயல்பட ஒரு நிமிடம் ஆகாது. ஆனால், யாரும் வழக்கு வாங்க கூடாது. படிக்க வேண்டும் என்பது தான் ராமதாஸின் நோக்கம்" என்றார்.

புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் ஏற்புரை வழங்கிய பாமக நிறுவனர் ராமதாஸ், "தெரிந்த நினைவில் உள்ள பழைய நினைவுகளை தொகுத்து இந்த நூலாக வெளியிடுகிறோம். ராமதாஸ் நீ யார் என்று கேட்டால்? அடிப்படையில், விவசாயி, மருத்துவர் அதன் பின்னர்தான் அரசியல்வாதி. எந்தப் பதவியையும் விரும்பாத வித்தியாசமான அரசியல்வாதி.

அரசியல்வாதி அனைத்தையும் கற்றறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் முடிவெடுக்க முடியும். அதிகாரிகள் அருகில் இருந்து ஆலோசனைக் கூறலாம்; முடிவுகளை அரசியல்வாதிதான் எடுக்க வேண்டும். காமராஜர், எம்.ஜி.ஆர். கருணாநிதி ஆகியோர் அதிகம் படிக்காதவர்கள்.

இருந்தாலும் செயலாளர்கள் என்ன ஆலோசனைகளைக் கூறினாலும், முடிவை அவர்கள் எடுத்துள்ளார்கள். காமராஜர் மதிய உணவுத் திட்டம், எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம், கருணாநிதி 3 விதமான இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார்கள். இவைகளை அதிகாரிகள் மறுத்தது குறிப்பிடத்தக்கது.

என்னை சாதி என்கிற குறுகிய வட்டத்தில் தமிழக மக்கள் சுருக்கி விட்டார்கள். இரட்டைக் குவளை முறையை ஒழித்ததுதான் சாதி சார்பா? ஐரோப்பிய நாடுகளில் நிழல் அமைச்சரவை இருக்கும். நிழல் பட்ஜெட்டை உருவாக்கி அளித்துள்ளோம்.

மும்மூர்த்திகள் என்னிடம் வந்து என்ன வரம் வேண்டும் எனக் கேட்டால், ஒரு சொட்டு மது இல்லாத தமிழ்நாடு, ஒரு சொட்டு நீர் கடலுக்கு செல்லக்கூடாது என்பதை வரமாக கேட்பேன். கொசுறு வரமாக எங்கும் கஞ்சா விற்க கூடாது என கேட்பேன்.

ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் கொண்டு வரப்படுகிறது. அதே போல, வாக்குக்கு பணம் இல்லாத தேர்தல் என்கிற சட்டமும் கொண்டு வரவேண்டும். ஒரு ரூபாய் அளித்தாலும் 10 ஆண்டுகள் சிறை அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரவேண்டும்.

கருணாநிதி காலத்தில் தேர்தலில் பணம் அளிக்கக்கூடாது என்று தீர்மானம் போடலாம் என கூறினேன். அதற்கு அவர் சாத்தியமா என கேட்டார். அதன் பின்னர் அது நடைபெறாமலேயே போய்விட்டது. நான் அரசியல்வாதி, என் தொழில் போராடுவது அதனால் நான் போராடிக் கொண்டே இருப்பேன் என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.