தஞ்சாவூர்: போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி பாமக சார்பில் பல்வேறு வகையான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் அறிவுறுத்தலின் பேரில், தஞ்சை வடக்கு மாவட்ட பாமக சார்பில் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் ஏற்பாட்டில், கும்பகோணத்தில் இன்று சர்வ மங்கள மகா யாகம் நடைபெற்றது.
இதையும் படிங்க: பைக்கை கண்டுபிடிச்சு கொடுத்தா ரூ.10 ஆயிரம் பரிசு.. தாய் பாசத்தில் தவிக்கும் மதுரை மாநகராட்சி ஊழியர்!
இன்று, சர்வதேச இதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் 'மதுவை ஒழிப்போம் மக்களைக் காப்போம்' என்பதை வலியுறுத்தி கும்பகோணம் ரயில் நிலையம் அருகே இன்று (ஞாயிற்கிழமை) நடைபெற்ற சர்வ மங்கள மகா யாகத்தில் ராமதாஸின் மூத்த மகள் காந்தி பரசுராமன் உட்பட ஏராளமான பெண்கள் ஒரே மாதிரியான சேலை உடுத்திப் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: HRCE தணிக்கைத் துறையில் புதிய பணியிடங்களை ஏற்படுத்த பணியாளர் சங்கம் வலியுறுத்தல்!
முன்னதாக இதற்கான புனித நீர் மற்றும் யாகத்தில் சேர்க்க வேண்டிய மங்கலப் பொருட்கள் கும்பகோணம் மகாமக குளத்தில் இருந்தும், பிமுகேஸ்வரர் திருக்கோயிலில் இருந்தும் கொண்டு வரப்பட்டது. பின்னர் தமிழர்களின் நாட்டுப்புற இசை மற்றும் நாதஸ்வர மேள தாளம் மங்கல வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக, யாகம் நடைபெறும் காமராஜர் சாலைக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து அங்கு யாகம் தொடங்கி நடைபெற்றது. இதில் பெண்கள், பாமக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.