ETV Bharat / state

தடைகளைத் தாண்டி தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு பாடுபடும்.. பிரதமர் மோடி! - மத்திய அரசு திட்டங்கள்

PM Narendra Modi Visit Tuticorin: பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்வில், தடைகளைத் தாண்டி தமிழகத்தின் வளர்ச்சி திட்டத்தை, வளர்ச்சி பயணத்தை மத்திய அரசு செயல்படுத்தியே தீரும் என கூறினார்.

PM Narendra Modi
பிரதமர் நரேந்திர மோடி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 4:17 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி, ரூ.17 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் துவங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது, "மத்திய அரசின் சீரிய முயற்சி காரணமாக, அதிகரித்து வரும் இந்த இணைப்பு, தமிழ்நாட்டில் வாழ்க்கை வாழ்வதில் சுலபத்தன்மையை அதிகரித்து வருகிறது.

நான் இங்கே உரையாற்றுவது, இங்கே தெரிவிக்கும் கருத்துக்கள் யாவும், ஒரு அரசியல் கட்சியின் சித்தாந்தமோ அல்லது என்னோடு தனிப்பட்ட சித்தாந்தமோ, கோட்பாடோ கிடையாது. இது வளர்ச்சி முன்னேற்றத்திற்கான கோட்பாடு. நான் இங்கே இதைக் கூறும்போது தமிழ்நாட்டிலே இருக்கும் செய்தித்தாள்கள் இதை பிரசுரிக்க மாட்டார்கள். ஏனென்றால், அதனை தமிழக அரசு பிரசுரிக்க விடாது.

ஆனாலும் கூட, இந்த தடைகளைத் தாண்டி தமிழகத்தின் வளர்ச்சி திட்டத்தை, வளர்ச்சி பயணத்தை மத்திய அரசு செயல்படுத்தியே தீரும். நீர் வழிகள் மற்றும் கடல் வழி வாணிபத் துறையை, பல தசாப்தங்களோடு எதிர்பார்த்துத் தொடர்ந்து நோக்கி வந்திருக்கிறது.

ஆனால் பல எதிர்பார்ப்புகளைத் தாங்கி கொண்டிருந்த துறைகள்தான் இன்று வளர்ச்சியடைந்த பாரதத்தின் அஸ்திவாரம் ஆகி வருகின்றன. தமிழ்நாட்டிற்கு இதனால் மிகப்பெரிய ஆதாயம் கிடைத்து வருகிறது. தமிழ்நாட்டின் வசம் 3 பெரிய துறைமுகங்கள் இருக்கின்றன. 1 டஜனுக்கும் மேற்பட்ட சிறிய துறைமுகங்களும் இருக்கின்றன.

நமது தென்னாட்டின் கிட்டத்தட்ட அனைத்து மாநில கரையோரப் பகுதிகளும் எல்லையில்லா சாத்தியக்கூறுகள் நிறைந்தவையாக இருக்கின்றன. கடல் வாணிபத்துறை மற்றும் நீர்வழித்துறை ஆகியவற்றின் மேம்பாடு என்பதற்கான நேரடியான பொருள் என்ன தெரியுமா? தமிழ்நாடு போன்ற மாநிலத்தின் வளர்ச்சி, கடந்த 1 தசாப்தத்தில் மட்டும் வ.உ.சி துறைமுகத்தின் கப்பல் போக்குவரத்து 35 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் இந்த துறைமுகம் 38 டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. இதன் ஆண்டு வளர்ச்சி வீதம் கிட்டதட்ட 11 சதவீதம் இருந்துள்ளது. இதனைப் போன்ற பலன்கள்தான், இன்று தேசத்தின் பிற பெரிய துறைமுகங்களிலும் கூட காண கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த வெற்றிகளின் பின்னணியில், பாரத அரசின் சாகர் மாலா போன்ற திட்டங்களுக்கும் பெரிய பங்களிப்பு அடங்கி இருக்கிறது. மத்திய அரசின் முயற்சி காரணமாக, கடல் வாணிபம் மற்றும் நீர்வழித் துறைகளில் இந்த பாரதம் பெரும் புகழ் ஈட்டி வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பாட்டியல் செயல்பாட்டுக் குறியீட்டில் பாரதம் பல புள்ளிகள் உயர்ந்து, 38வது இடத்தைப் பிடித்திருக்கிறது. நம்முடைய துறைமுகத் திறன் இந்த ஓர் தசாப்தத்தில் மட்டும் 2 மடங்கு ஆகி உள்ளது. தேசிய நீர்வழிகளில் 8 மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது.

நீர் வழி உல்லாசப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது. கப்பல் பயணிகளின் எண்ணிக்கை கூட 2 மடங்கு அதிகரித்துள்ளது. இனி வரும் காலங்களில், கடல் வாணிபத் துறையின் இந்த வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்க இருக்கிறது.

இதனால் பெரிய ஆதாயம் கரையோரம் இருக்கின்ற தமிழ்நாட்டிற்கு ஏற்பட இருக்கிறது. இங்கே வேலை வாய்ப்பிற்கான சந்தர்ப்பங்கள் அதிகரிக்க இருக்கின்றன. தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் பயணித்து, மேலும் வேகமாக முன்னேறும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் ஒரு உத்தரவாதத்தை அளிக்க விரும்புகிறேன்.

3வது முறையாக நாம் மறுபடியும் அரசு அமைக்கப் போகும் நேரத்திலேயே மோடியுடைய இந்த கேரண்டி, உத்தரவாதத்தை அறுதியிட்டுக் கூறுகிறேன். இன்று தொடங்கப்பட்டிருக்கும் திட்டத்தை நிறைவேற்ற நாங்கள் எப்போதும் போலவே நிறைவான பலத்தோடு முயற்சி செய்வோம். தமிழக மக்களுக்கு இது மோடி அளிக்கும் உத்தரவாதம், மோடியின் கேரண்டி.

கடந்த 2 நாட்களாக நான் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் ஈடுபட்டிருக்கிறேன். இப்போது இங்கே நீங்கள் வெளிப்படுத்தும் இதே அன்பு, பாசம், இதைத்தான் தமிழ்நாட்டிலுள்ள பிற பகுதிகளிலும், தமிழர்கள் என் மீது பொழிந்தார்கள். அவர்களுக்கு நான் பல மடங்காக அன்பைத் திருப்பி பொழிவேன்” என்றார்.

இந்த கொண்டாட்டம், தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தின் கொண்டாட்டம் எனவும், இதற்கு நீங்கள் செல்போனில் டார்ச்லைட் அடித்துக் காட்டுங்கள், தமிழக மக்கள் இதில் கலந்து கொள்ளட்டும் என்று கூறி உரையை முடித்தார்.

இதையும் படிங்க: பண்ருட்டி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.