ETV Bharat / state

திருப்பூரில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - விழா ஏற்பாடுகள் தீவிரம்!

PM Modi Tamil Nadu visit: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க உள்ள நிலையில், அங்கு பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 12:35 PM IST

திருப்பூர்: பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிப்.27ஆம் தேதி தமிழகம் வர உள்ளார். திருப்பூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தரும் மோடி, திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

பின்னர், 28ஆம் தேதி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு புதிய திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். குறிப்பாக, குலசேகரப்பட்டினத்தில் 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுவதற்கானத் திட்டப்பணிகளுக்கு மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார்.

அதேபோல், ரூ.550 கோடி மதிப்பீட்டில் ராமேஸ்வரம் - பாம்பன் கடலின் நடுவே கட்டப்பட்ட புதிய ரயில்வே தூக்கு மேம்பாலத்தை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார். இதைத்தொடர்ந்து, நெல்லை மாவட்டத்தில் பாஜக சார்பில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் "என் மண் என் மக்கள்" நடைபயணம் நிறைவு விழா திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி பல்லடத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கு வருகை தரவுள்ளார்.

இந்த பொதுக்கூட்டமானது பிரம்மாண்டமான முறையில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 5 லட்சம் பேர் அமரும் வகையில், மேற்கூரையுடன் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன இந்நிலையில், திருப்பூரில் மாநாடு நடைபெற உள்ள மாதப்பூர் பகுதியில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான மைதானத்தை சுத்தப்படுத்தும் பணிகளும் விழா மேடை அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

மேலும் மாநாட்டில் பங்கேற்க வரும் தொண்டர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வதற்கான கூடங்கள் அமைக்கும் பணிகளும் மாநாட்டிற்கு வருபவர்களை வரவேற்கும் விதமாக கொடிக்கம்பங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் வரவுள்ளார். இதைத்தொடர்ந்து, மாநாட்டுத் திடலுக்கு அருகிலேயே ஹெலிபேட் (helipad) அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. மேலும், பிரதமர் மோடி வருகையையொட்டி, பாதுகாப்பு பணிக்காக சுமார் 6,000 முதல் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.