ETV Bharat / state

"எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை புகழ்ந்து அதிமுக வாக்குகளை பெற பிரதமர் முயற்சி" -அமைச்சர் எ.வ.வேலு கருத்து! - ranipet

Minister EV Velu: அதிமுக தொண்டர்கள் வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என முயற்சிக்கிறார் பிரதமர் மோடி, என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு குற்றம் சாட்டியுள்ளார்.

சுற்றுலா மாளிகை திறப்பு விழா
சுற்றுலா மாளிகை திறப்பு விழா
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 9:14 AM IST

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், காரை கூட்ரோட்டில் பொதுப்பணித்துறை சார்பில் 6.91 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுற்றுலா மாளிகை கட்டடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் கைத்தறி துணி நூல்துறை அமைச்சர் காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில்,"தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு மாநிலத்தில் உள்ள பாழடைந்த சுற்றுலா மாளிகைகளை மேம்படுத்தத் திட்டம் வகுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் வேலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் சுற்றுலா மாளிகை தற்போது திறக்கப்பட்டுள்ளது. தி.மு.க எத்தனையோ அரசியல் கட்சிகளைச் சந்தித்துத் தான் இந்த நிலைமைக்கு தற்போது வந்துள்ளது.

திமுக சித்தாந்தம் வேறு மற்றும் பாஜகவின் சித்தாந்தம் முற்றிலும் வேறு. பிரதமர் நரேந்திர மோடி அவருடைய கட்சி சார்ந்த கூட்டத்தில் தி.மு.க பற்றி பேசியுள்ளார், அது அவர்களுடைய தொண்டர்களை உற்சாகப்படுத்தும், மேலும் தேர்தல் நெருங்குவதால் இது போன்று பேசியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சியாக உள்ளது திமுக, அது ஆட்சியில் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் மக்களுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. தமிழ் நாட்டில் எதிர்க்கட்சியாக இருந்தபோது பல போராட்டங்களை நடத்தியது திமுக தான். மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற தலைவர்களைப் பிரதமர் மோடி புகழ்ந்து பேசி இருக்கிறார். எப்படியாவது அதிமுக தொண்டர்கள் வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என மோடி முயற்சிக்கிறார்.

திருவண்ணாமலையில் குண்டும் குழியுமான சாலை இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் சொல்கிறார். உண்மையில் அப்படி இருக்குமேயானால், அதனைப் புகைப்படம் எடுத்து அனுப்பினால் 48 மணி நேரத்தில் சாலையைச் சீரமைப்போம். தமிழ் நாட்டில் எங்குமே குண்டும் குழியுமாகச் சாலைகள் இல்லை அனைத்து சாலைகளும் சீராக இருக்கிறது. திமுக தலைமையிலான கூட்டணி சிறப்பாக இருக்கிறது. அனைத்து தலைவர்களும் எங்களிடம் நட்புடன் இருக்கின்றனர். இதே கூட்டணியில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்போம்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் காந்தி பேசுகையில்,"தமிழ் நாட்டில் தி.மு.க ஆட்சிக்கு வந்து 33 மாத காலம் ஆகின்றது. இதில் எண்ணற்ற பல நல்ல திட்டங்களை வகுத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். கடந்த 10 ஆண்டு ஆட்சி எப்படி நடைபெற்றது என்று நினைத்துப் பாருங்கள். திமுக ஆட்சியில் ஒரு துறை மட்டும் இல்லை அனைத்து துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது" என்றார்.

இதையும் படிங்க: "இந்த நிதியாண்டின் இறுதிக்குள் தமிழக மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 9 பில்லியன் டாலராக உயரும்" - டி.ஆர்.பி.ராஜா உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.