ETV Bharat / state

கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

Guindy national geriatric hospital: சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள 'தேசிய முதியோர் நல மருத்துவமனையை' பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

PM MODI
PM MODI
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2024, 6:37 PM IST

Updated : Feb 25, 2024, 9:58 PM IST

சென்னை: சென்னை கிண்டியில் 116.31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 'தேசிய முதியோர் நல மருத்துவமனையை' பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். மூத்த குடிமக்களின் நலனுக்காக திறக்கப்படும் சிறப்பு மருத்துவமனை இதுவாகும்.

மத்திய அரசின் 2014-2015ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையின்போது "தேசிய முதியோர் நல மருத்துவமனை" சென்னையில் நிறுவப்படும் என்ற அறிவிப்பானது வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், கடந்த 2016ஆம் ஆண்டு கிண்டி கிங் நோய்த் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், ரூ. 78 கோடி மதிப்பீட்டில் தேசிய முதியோர் நல மருத்துவமனை அமைப்பதற்கான நிர்வாக ஒப்புதல் தமிழக அரசால் வழங்கப்பட்டது.

இதற்கான பணியானது 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. ஆனாலும், பயன்பாட்டிற்கு வராமல் இருந்த நிலையில், 2020ஆம் ஆண்டு ஏற்பட்ட கரோனா தொற்று காரணமாக அவசரகால மருத்துவமனையாக திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. பின்னர், 2022ஆம் ஆண்டு மே மாதம் கரோனா மருத்துவமனை செயல்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிகிச்சைப் பிரிவுகள்: பொது மருத்துவம், நரம்பியல் மருத்துவம், குடல் இரைப்பை மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், பல் சிகிச்சைப் பிரிவு, ஆண்கள் அறுவை சிசிக்சை மருத்துவம், சிறு அறுவை சிகிச்சை மையம், உள்நோக்கியியல் மருத்துவம், ஊடுகதிர் நிழற்படம், கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு, மத்திய ஆய்வகம், மனநலம் மருத்துவம், உடலியலாக்க மற்றும் புணர்வாழ்வு மருத்துவப் பிரிவு, இயன்முறை மருத்துவம், மைய தொற்று நீக்கியல் துறை, மயக்கவியல் துறை, நவீன அறுவை சிகிச்சை அரங்கம், இரத்த சுத்திகரிப்பு பிரிவு,

உயர் அவசர நோய் குறைப்பு வார்டு, நிர்வாகத் துறை நூலகம், கருத்தரங்கு கூடம், ஆயுஷ் மருத்துவம் உள்ளிட்ட பல சிகிச்சைப் பிரிவுகள் இம்மருத்துவமனையில் இடம் பெற்றுள்ளது. மேலும், இந்த மருத்துவமனையில் 8 மின்தூக்கி, சாய்வு தளம், தீயணைப்பு உபகரணங்கள், ஆக்ஸிஜன் இணைப்புகள், கழிவுநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவப்படுகொலை; பெண்ணின் சகோதரர் உட்பட 4 பேர் கைது!

Last Updated : Feb 25, 2024, 9:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.