ETV Bharat / state

மலேசியாவில் உயிரிழந்த அண்ணனின் உடலை மீட்டுத்தரக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்த சகோதரிகள்! - Vellore district collector

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 11, 2024, 6:48 PM IST

Vellore district collector: மலேசியாவில் உயிரிழந்த தம்பியின் உடலை மீட்டுத்தரக் கோரி சகோதரிகள் வேலூர் மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Vellore
மனு அளிக்க வந்த பொதுமக்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் பகுதியில் தமிழக அரசின் ஊரக பகுதிகளுக்கான "மக்களுடன் முதல்வர்" நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மனு அளிக்க வந்த பெண்கள், மலேசியாவில் உயிரிழந்த அவர்களது சகோதரரின் உடலை மீட்டுத் தரும்படி மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமியின் காலில் விழுந்து கண்ணீர் மல்க மனு அளித்தார். அவர்களுள் ஒருவர் கதறி அழுததில் மயங்கி விழுந்ததார். இதனால் அரங்கத்தில் பதற்றம் நிலவியது. பின்னர், மயங்கி விழுந்தவரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து மனு அளிக்க வந்தவர்கள் கூறுகையில், "காட்பாடி அடுத்த சேவூர் பகுதியை சேர்ந்தவர் அனுன் தேவராஜ் (37). எலக்ட்ரீசியன் வேலை தேடி கடந்த மார்ச் மாதம் மலேசியா சென்றார். முன்னதாக அவரை அழைத்துச் சென்றவரால் ஏமாற்றப்பட்டார். தொடர்ந்து மற்றொரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை திடீரென அங்கு உயிரிழந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. அவரது உடலை மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க வந்துள்ளோம்" எனக் கூறினர்.

பின்னர், இது குறித்து மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி கேட்டபோது, தூதரகத்திற்கு இச்சம்பவம் குறித்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனிடையே, மற்றொரு மாற்றுத்திறனாளி பெண்கள் மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து, தங்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும்படி கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அவர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

இதையும் படிங்க: “யாரை பார்த்து அறிவு கெட்டவன்னு சொல்ற?”.. அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் பெண் கடும் வாக்குவாதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.