ETV Bharat / state

TNUSRB தலைவராக முன்னாள் டிஜிபி சுனில் குமார் நியமிக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி மனு! - TNUSRB Chairman Appointment Issue

Retired DGP Sunil Kumar TNUSRB Chairman Appointment Issue: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம்
சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2024, 2:58 PM IST

சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமாரை நியமித்து தமிழக அரசு அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த நிலையில், ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமாரின் நியமனத்தை ரத்து செய்யக் கோரி, அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் தலைவர் பதவிக்கான நியமனம் தொடர்பாக முறையான விதிகள் இல்லை எனவும், ஆனால் பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு முரணாக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் தற்போது டிஜிபி அந்தஸ்தில் 16 அதிகாரிகள் உள்ள நிலையில், ஓய்வு பெற்ற டிஜிபியை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் தலைவராக நியமித்தது பணியில் உள்ள அதிகாரிகளின் உரிமையை பறிக்கும் செயல். இதுமட்டுமல்லாது, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் தலைவராக இருந்த சீமா அகர்வால், திடீரென மாற்றப்பட்டு செயற்கையான காலியிடம் உருவாக்கப்பட்டு, அந்த இடத்தில் ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுபோன்ற சூழலில், ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தால் மேற்கொள்ளப்படும் நியமனங்களில் முறைகேடுகள் எதுவும் நிகழும்பட்சத்தில், அவர் மீது துறை ரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

பொதுமக்கள் மற்றும் காவல்துறையின் நலனை கருத்தில் கொள்ளாமல், உள்நோக்கத்தோடு இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சுனில் குமார் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக கடந்த காலங்களில் செயல்பட்டதாகவும், அதற்கு பிரதிபலனாகவே தற்போது அவர் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பல்வேறு அரசியல் கட்சியினர் கூறுகின்றனர்.

எனவே, இடைக்கால நிவாரணமாக, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் தலைவராக சுனில் குமார் செயல்பட தடை விதிக்க வேண்டும். மேலும், எதன் அடிப்படையில் சுனில் குமார் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்பது தொடர்பாக விளக்கம் கேட்க வேண்டும் எனவும், அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்" என்றும் மனுதாரரான ஐ.எஸ்.இன்பதுரை தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: சிவில் வழக்குகளில் போலீசார் கட்டப்பஞ்சாயத்து; திராவிடர் விடுதலை கழகம் போராட்டம் நடத்த அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.