புதுக்கோட்டை: சிவகங்கையில் அரசு மதுபானக் கடையில் விற்கப்பட்ட மது பாட்டிலில் பல்லி செத்து கிடந்ததால் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி, ஒருவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், சத்தியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (37). கொத்தனார் வேலை பார்த்து வரும் இவர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தங்கி அருகே உள்ள கிரஷர் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், சக்திவேல் கடந்த ஜூலை 5ஆம் தேதி திருப்பத்தூரில் உள்ள அரசு மதுபானக் கடையில், ஒரு குவாட்டர் மது பாட்டில் வாங்கி அருந்தியுள்ளார்.
அதில், இறந்த பல்லி கிடந்ததாக கூறப்படுகிறது. இதனால் சக்திவேலுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், இறந்த பல்லியால் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது, இதற்கு அரசு மதுபானம் தான் காரணம். இதனால், தனக்கு தற்போது கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறி சக்திவேல் திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படையுங்கள் - தமிழக அரசுக்கு மாயாவதி வலியுறுத்தல்