ETV Bharat / state

4 நாட்களாகப் போக்குகாட்டும் சிறுத்தை.. இறைச்சியுடன் காத்திருக்கும் வனத்துறையினர்: மீண்டும் அதே பகுதிக்குச் சிறுத்தை வருமா? - AROKIYANATHAPURAM Leopard issue - AROKIYANATHAPURAM LEOPARD ISSUE

Leopard issue in Mayiladuthurai: மயிலாடுதுறை மாவட்டம், ஆரோக்கியநாதபுரம் பகுதியில் பதுங்கி கடந்த 4 நாட்களாகப் போக்குகாட்டி வரும் சிறுத்தையைப் பிடிக்க 3 கூண்டுகளில் ஆடு மற்றும் இறைச்சியை வைத்து வனத்துறையினர் காத்திருக்கும் நிலையில், சிறுத்தையை எப்போது பிடிக்கப்படும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

LEOPARD MOVEMENT IN MAYILADUTHURAI
LEOPARD MOVEMENT IN MAYILADUTHURAI
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 6, 2024, 3:31 PM IST

4 நாட்களாகப் போக்குகாட்டும் சிறுத்தை.. இறைச்சியுடன் காத்திருக்கும் வனத்துறையினர்: மீண்டும் அதே பகுதிக்குச் சிறுத்தை வருமா?

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் கடந்த 2ஆம் தேதி இரவு சிறுத்தை ஒன்று குடியிருப்புப் பகுதிக்குள் நடமாடும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்த வனத்துறை, காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் இணைந்து சிறுத்தையைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

சிறுத்தை பிடிபடாத நிலையில், ஆரோக்கியநாதபுரம் கருவேலங்காடு பகுதிக்கு இடம்பெயர்ந்ததால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், அப்பகுதியிலிருந்த 9 பள்ளிகளுக்கு ஏப்ரல் 5ஆம் தேதி விடுமுறையும் அளித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பகத்திலிருந்து வன காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், 16 தானியங்கி கேமராக்கள், மதுரையிலிருந்து சிறுத்தையைப் பிடிக்க 3 ராட்சச கூண்டுகள் மற்றும் வலைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வரவழைக்கப்பட்டு சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கவும், சிறுத்தையைப் பிடிப்பதற்கான தீவிர முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், 3ஆம் நாளான நேற்று (வெள்ளிக்கிழமை) சித்தர்காடு பகுதியில் ஆடு ஒன்று கழுத்துப்பகுதி குதறிய நிலையில் இறந்து கிடந்தது. ஆனால், ஆரோக்கியநாதபுரம் கருவேலங்காட்டில் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி கேமரா மற்றும் கூண்டுகளில் சிறுத்தை சிக்கவில்லை எனவும், சிறுத்தை எங்கிருக்கிறது என்பது புலப்படாத நிலையில் ஆடு இறந்துள்ளது எனவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், ஆடு கொல்லப்பட்டிருந்த தன்மையை ஆராய்ந்த வனத்துறையினர் ஆட்டை சிறுத்தை கொன்று இருக்க 70 சதவீதம் வாய்ப்புள்ளதாகவும், கால்தடங்கள் இல்லாததால் உறுதியாகச் சொல்ல முடியாது எனவும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தான் தெரியவரும் என்றும் தெரிவித்தனர். மேலும், ஆரோக்கியநாதபுரம் கருவேலங்காடு பகுதியில் மீண்டும் நேற்று இரவு 3 கூண்டுகளில் உயிருடன் ஆடுகள் மற்றும் இறைச்சியை வைத்து சிறுத்தை அகப்படுமா? எனக் வனத்துறையினர் காத்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் உள்ள கூட்ஸ் யார்ட் பிளாட் பார்மில் ஒரு ஆட்டினை அடித்து சிறுத்தை தின்றதாகப் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, கொல்லப்பட்ட ஆட்டின் தலை மற்றும் முன்கால்கள் மட்டும் எஞ்சிய நிலையில், அவற்றை வனத்துறை மற்றும் போலீசார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும், ஆடு இறந்துகிடந்த தன்மையை வைத்து, ஒருவேளை நாய்கள் கூட கடித்துக் குதறியிருக்கலாம் எனக் கூறப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திலிருந்த ஆட்டின் தலை மற்றும் முன்கால்கள் கைப்பற்றப்பட்டது. இதற்கிடையே, முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து சிறுத்தையைக் கண்காணித்து அதனைத் திறமையாகப் பிடிக்கும் பணியில் உள்ள பொம்மன், காலான் ஆகிய இருவரும் இறந்த ஆட்டை ஆய்வு செய்தனர்.

சிறுத்தை வந்து சென்றதற்கான எந்தவித தடயங்களும் இல்லாததால் சிறுத்தை தான் கொன்றது என்பதை உறுதிப்படுத்த இயலாது என்றும், இறந்த ஆட்டை உடற்கூறாய்வு செய்வதற்கு எடுத்துச் சென்றுள்ள நிலையில், நாய் கடித்துக் கொன்று இருக்க வாய்ப்புள்ளதாகவும், தடயங்கள் எதுவும் இல்லாததால் சிறுத்தை தான் அடித்துக் கொன்றது என்பதை வனத்துறையினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை, இதனால் அப்பகுதி மக்கள் பயத்துடனே இருந்து வருகின்றனர்.

இதனிடையே நேற்று தேரிழந்தூரில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக சீனிவாசபுரத்தை சேர்ந்த அமீர்பாஷா மகன் பைசல் அகமது(30), சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதன் அடிப்படையில் தேரழுந்தூர் கிராமத்திற்குச் சென்ற வனத்துறையினர் அங்குச் சோதனை மேற்கொண்டதில் வாட்ஸ் அப்பில் வெளியிடப்பட்ட வீடியோ போலியானது என்று தெரியவந்தது.

மேலும், அந்த வீடியோ மகாராஷ்டிரா மாநிலத்தில் எடுக்கப்பட்டது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பைசல் அகமது வீட்டிற்குச் சென்ற வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை செய்தனர். அப்போது, "தான் வெளியிட்ட வீடியோ போலியானது. இதை வெளியில் யாரும் பகிர வேண்டாம். தவறாகப் பதிவிட்டுவிட்டேன்" என்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

சிறுத்தை நடமாட்டத்தை 3 துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் தீவிரமாகக் கண்காணித்து வரும் நிலையில், இது போன்ற தவறான தகவலைப் பரப்பக் கூடாது எனவும், விரைவில் சிறுத்தை பிடிக்கப்படும் எனவும், அதுவரை மக்கள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: திருவாரூர் அருகே கோர விபத்து: ஒருவர் உயிரிழப்பு; 2 குழந்தைகள் உட்பட 7 பேர் படுகாயம்! - Thiruvarur Car Accident

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.