சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இங்கு இரவு நேரங்களில் வரக்கூடிய பயணிகளை குறிவைக்கும் திருநங்கைகள் சிலர், பேருந்து நிலையத்தில் பாலியல் தொழில் செய்வதுபோல விலை பேசி அழைத்துச் செல்வதாகவும், பின்னர் பயணிகள் கொண்டு வரும் உடைமைகள், செல்போன், பணம் உள்ளிட்டவற்றை அவர்கள் பறித்துச் செல்வதாக புகார் எழுந்துள்ளது.
இதுதவிர பேருந்து நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகளை தரக்குறைவாக பேசி, பணம் தரவில்லை என்றால் தாக்கி பணம் பறிப்பதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அடித்து மிரட்டி வழிப்பறி: திருநங்கைகள் வார்த்தையை நம்பி அவர்களுடன் பாலியல் ரீதியாக செல்லக்கூடிய நபர்களை தனியாக இருள் அடைந்த இடத்திற்கு அழைத்துச் சென்று, அடியாட்களைக் கொண்டு அவர்களை அடித்தும், மிரட்டியும் பணம், உடைமைகளை பறிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏமாற்றப்படும் நபர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால், பெயர் கெட்டுப் போய்விடும் என்பதற்காக புகார் கொடுக்காமல் விட்டுவிடுவதாகவும் சொல்கின்றனர்.
அதேநேரம், ரோந்துப் பணியில் ஈடுபடக்கூடிய காவலர்கள் சிலர், திருநங்கைகளிடம் கையூட்டுகளை பெற்றுக் கொண்டு இதுபோன்று பொது இடத்தில் பாலியல் தொழிலுக்கு அனுமதிப்பதாகவும், எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னதாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெயர் விரும்பாத பயணி ஒருவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி: ஓட்டு போட காத்திருந்த பெண்ணுக்கு கத்திக்குத்து..