ETV Bharat / state

தீபாவளி பண்டிகை சிரமத்தை தவிர்க்க பகுதிநேர ஆசிரியர்களுக்கான சம்பளத்தை வழங்குக - தமிழக அரசுக்கு கோரிக்கை - part time teachers salary issue - PART TIME TEACHERS SALARY ISSUE

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள் சம்பளம் இல்லாமல் தவித்து வருவதாகவும், தீபாவளி நேரத்தில் இது மேலும் சிரமமாக இருப்பதால், அரசே கூடுதல் நிதியை வழங்கி சம்பளம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக தலைமைச் செயலகம், செந்தில்குமார்
தமிழக தலைமைச் செயலகம், செந்தில்குமார் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2024, 10:21 PM IST

சென்னை : தமிழ்நாட்டில் இடைநிலைக் கல்வித் திட்டத்தில் பணியாற்றி வரும் பணியாளர்கள், ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசின் நிதியில் இருந்து சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர்களுக்கான ஊதியம் மற்றும் கல்வியின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் புதிய திட்டங்கள் போன்றவற்றிற்கு திட்ட ஒப்புதல் வாரியத்தின் (Project Approval Board) ஒப்புதலுக்கு உட்பட்டு நிதி வழங்கப்படும். அதில், மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் நிதியை வழங்கி வருகிறது.

அதன்படி, 2024-2025ம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.3,586 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மத்திய அரசின் 60 சதவீதம் பங்கு ரூ.2,152 கோடியாகும். மேலும், தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

அப்போது தமிழ்நாட்டில் இருந்தும் பள்ளிகளை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது. இதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புக்கொள்ளாத நிலையில், முந்தைய ஆண்டுக்கான ரூ.249 கோடி தர வேண்டி இருந்தது. இந்நிலையில் மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்ற காரணத்தை தெரிவித்து, தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் உள்ளது.

இதையும் படிங்க : "சமுகத்தை வழி நடத்தும் தகுதி திருமாவளவனுக்கு இல்லை" - எச்.ராஜா விளாசல்

இந்நிலையில், பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தமிழ்நாடு முதலமைச்சருக்கு வைத்துள்ள கோரிக்கையில், "தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் பணிபுரியும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள், 2 ஆயிரம் சிறப்பு பயிற்றுநர்கள், 2,800 வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள், 800 கணக்காளர்கள், 436 வட்டார வள மையங்களில் பணிபுரியும் பொறியாளர்கள், கணினி பதிவாளர்கள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகுப்பூதிய பணியாளர்களுக்கு செப்டம்பர் மாதம் சம்பளம் இதுவரை வழங்கவில்லை. இதற்கு மத்திய அரசு பங்கு தொகை ரூ.822 கோடியை விடுவிக்கவில்லை என காரணம் சொல்லப்படுகிறது.

வீட்டு வாடகை , சாப்பாடு செலவு , மருத்துவச் செலவு, குடும்பச் செலவு என பல்வேறு நிலையில் சம்பளத்தை நம்பி தான் அனைவரின் வாழ்க்கையும் உள்ளது. இந்த தீபாவளி நேரத்தில் இது மேலும் சிரமமாக உள்ளது. மத்திய அரசு பங்கு தொகையை விடுவிக்க தாமதம் ஆகும் எனில், தமிழ்நாடு அரசே அனைவருக்கும் கூடுதல் நிதியை வழங்கி சம்பளம் வழங்க வேண்டும்.

இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிதி சிக்கல் வராமல் இருக்க தமிழ்நாடு அரசு முன் எச்சரிக்கையோடு நடவடிக்கை வேண்டும். பகுதிநேர ஆசிரியர்கள் விஷயத்தை பொறுத்தவரை, திமுக தேர்தல் வாக்குறுதி 181-ல் சொன்னபடி முதல்வர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணி நிரந்தரம் செய்து இருந்தால் இது போன்ற பிரச்னை ஏற்பட்டு இருக்காது. பணிப்பாதுகாப்பு கிடைத்து இருக்கும். இப்போது சம்பளம் கிடைக்க காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது.

இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசின் நிதியில் இருந்து நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் உதவித்தொகையாக வழங்குகிற ரூ.2,500-ஐ தாமதம் செய்யாமல் உடனே வழங்க வேண்டும். இந்த பிரச்னையைத் தடுக்க, வரும் 8ம் தேதி நடக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில், திமுக வாக்குறுதி 181-ஐ நிறைவேற்றி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" என கேரிக்கை விடுத்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.