ETV Bharat / state

பணிநிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்! - part time teachers protest

பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரக் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி, இன்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்
பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2024, 8:38 PM IST

சென்னை : தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, கணினி, தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் ரூ.12,500 தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளாக தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி தமிழ்நாடு அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதோடு பல்வேறு கட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண் 181-ன்படி பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரக் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, பகுதிநேர ஆசிரியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே உண்ணாவிரத போராட்டம் இன்று( செப் 12) காலை நடைபெற்றது.

ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டமாக நடைபெறும் இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

அதில் பேசிய பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் மாநில அமைப்பு செயலாளர் இளவரசன், "பல ஆண்டுகளாக எங்களது கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறோம். கடந்த ஆட்சியிலும் சரி, இந்த ஆட்சியிலும் சரி எங்கள் கோரிக்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. ஒரு வருடத்திற்கு முன்பும் தொடர் போராட்டம் நடத்தினோம். அமைச்சர்கள், அதிகாரிகளை சந்தித்தும் எவ்வித பலனும் இல்லை.

திமுக அரசாங்கம் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்றார்கள். ஆனால், தொடர்ந்து எந்த முகாந்திரமும் இல்லாமல் செயல்பட்டு வருகிறார்கள் இன்று மாலைக்குள் உயர் அதிகாரிகள் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று இருக்கிறோம். நல்ல தீர்வை எதிர்பார்த்துதான் போராட்டத்தை முன்னெடுத்து இருக்கிறோம்.

அமைச்சர் எங்களது கோரிக்கையை நிறைவேற்றுகிறோம் என்று கூறுகிறாரே தவிர, அதற்கான எந்த முன்னெடுப்பும் எடுக்கப்படவில்லை. இன்றுக்குள் பேச்சுவார்த்தை நடத்தவில்லையென்றால் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அடுத்தக்கட்ட நகர்வை அறிவிப்போம்.

அமைச்சர்தான் எங்களை போராட்டத்திற்கு தள்ளி உள்ளார். திமுக அரசு படிப்படியாக செய்தி தருவதாக கூறி உள்ளார்கள். இருந்தபோதிலும், காலதாமதம் ஏற்படுவதை உணர்த்தவே போராட்டத்தை கையில் எடுத்துள்ளோம். எங்களுக்கு முடிவு கிடைக்கவில்லையென்றால் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்போம்" என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.