ETV Bharat / state

டிடிவி தினகரன் வேட்புமனு ஏற்பு - Parliament election 2024 - PARLIAMENT ELECTION 2024

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 28, 2024, 12:32 PM IST

Updated : Mar 28, 2024, 3:26 PM IST

15:25 March 28

டிடிவி தினகரன் வேட்புமனு ஏற்பு

தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனின் வேட்புமனு நீண்ட இழுபறிக்கு பின்னர் ஏற்கப்பட்டது

14:39 March 28

சேலம் திமுக வேட்பாளரின் வேட்புமனு ஏற்பு

சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதிக்கு இரண்டு முகவரியில் அவருக்கு வாக்காளர் அடையாள அட்டை இருப்பதாக எழுந்த புகாரில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தா தேவி முன்பு செல்வகணபதி வழக்கறிஞர்கள் உரிய விளக்கம் அளித்தனர். அதன் பிறகு அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டதாக வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

13:34 March 28

தேனியில் டிடிவி தினகரன் வேட்புமனு: 3 மணிவரை ஒத்திவைப்பு

தேனியில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி, திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட வேட்பு மனு ஏற்கப்பட்ட நிலையில் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் வேட்புமனுவை பரிசீலனை செய்வதற்கு மாலை மூன்று மணி வரை ஒத்திவைக்கப்பட்டு பின் மீண்டும் பரிசீலனை செய்வதற்கான கூட்டம் நடைபெறும் என தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார்.

13:29 March 28

நெல்லையில் முக்கிய வேட்பாளர்கள் வேட்புமனு ஏற்பு

திருநெல்வேலி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி, காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா ஆகியோரது வேட்புமனு ஏற்பு - மாவட்ட தேர்தல் அலுவலர்

13:25 March 28

திருச்சியில் முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன், மதிமுக வேட்பாளர் துரை வைகோ, அதிமுக வேட்பாளர் கருப்பையா, நாம் தமிழர் வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் ஆகியோர் வேட்புமனு ஏற்கப்பட்டது.

13:24 March 28

நெல்லையில் ராமசுப்புவின் வேட்புமனு தள்ளுபடி

திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக வேட்புமனுத் தாக்கல் செய்த முன்னாள் எம்பி ராமசுப்புவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது

13:22 March 28

வடசென்னை திமுக வேட்பாளர் வேட்புமனு ஏற்பு

வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோர் வேட்புமனுக்கள் ஏற்பு; காலவதியான நோட்டரி பதிவை மீண்டும் தொடர விண்ணப்பித்துள்ள ஆவணங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அளித்ததன் பெயரில் வேட்புமனுக்கள் ஏற்கபட்டது.

12:59 March 28

சேலம் திமுக வேட்பாளர் வேட்புமனு நிறுத்திவைப்பு

சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதிக்கு இரண்டு வாக்குகள் இருப்பதால் அவரது வேட்புமனு பரிசீலனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்

12:58 March 28

ஆ.ராசாவின் வேட்புமனு ஏற்பு

நீண்ட இழுபறிக்கு பிறகு நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வேட்புமனு ஏற்பு

12:42 March 28

"டிடிவி தினகரன் வேட்புமனுவை ஏற்க கூடாது"

தேனி அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் வேட்பு மனுவை நிறுத்தி வைக்க திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. டிடிவி தினகரனின் வேட்பு மனுவை தேர்தல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை என கூறி எதிர்க்கட்சிகள் வேட்புமனுவை நிறுத்தி வைக்க ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் டிடிவி தினகரனின் வேட்பு மனுவை சரி பார்க்க ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

12:36 March 28

டி.ஆர்.பாலு, வினோஜ் பி செல்வம் வேட்புமனு ஏற்பு

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு, மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் ஆகியோரின் வேட்புமனு ஏற்பு

12:35 March 28

நயினார் நாகேந்திரன் வேட்புமனு ஏற்பு

திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி ஆகியோரது வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

12:33 March 28

அண்ணாமலையின் வேட்புமனுக்கு ஆட்சேபனை

கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு முறையாக பூர்த்தி செய்யப்படவில்லை எனக் கூறி திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் சிறிது நேரத்திற்கு பிறகு வேட்புமனு ஏற்கப்பட்டது.

12:32 March 28

கனிமொழி வேட்புமனு ஏற்பு

தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி, திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி ஆகியோரின் வேட்புமனு ஏற்கப்பட்டது

12:26 March 28

ஆ.ராசா வேட்புமனு நிறுத்திவைப்பு

நீலகிரி(தனி) திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வேட்புமனு பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Last Updated : Mar 28, 2024, 3:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.