ETV Bharat / state

வைகை தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் திருவிழாவிற்கான கொட்டகை முகூர்த்த விழா கோலாகலமாக நடைபெற்றது! - Madurai Chithirai Festival - MADURAI CHITHIRAI FESTIVAL

Madurai Chithirai Festival: சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வண்டியூர் வைகை ஆற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்தக் கால் நடும் விழா கோலாகலமாக நடைபெற்றது.

வைகை தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் திருவிழாவிற்கான கொட்டகை முகூர்த்த விழா கோலாகலமாக நடைபெற்றது

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 8, 2024, 10:33 PM IST

வைகை தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் திருவிழாவிற்கான கொட்டகை முகூர்த்த விழா கோலாகலமாக நடைபெற்றது

மதுரை: வண்டியூர் வைகை ஆற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் கள்ளழகர், மண்டுக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்விற்காக, கொட்டகை முகூர்த்தக் கால் நடும் விழா இன்று (ஏப்.08) கோலாகலமாக நடைபெற்றது.

ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின்போது மதுரை மாநகர் கோலாகலமாக்க காணப்படும். அந்த வகையில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடைபெறும் கொடியேற்றம், திருக்கல்யாணம், தேரோட்டம், அதனைத் தொடர்ந்து வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளுதல் என ஒவ்வொரு நாளும் மதுரை விழாக்கோலம் பூண்டிருக்கும்.

மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக, அழகர் மலையிலிருந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் தரித்து வண்டியூர் பகுதியில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி, சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் வரும், ஏப்.24 ம் தேதி நடைபெறவுள்ள இந்த நிகழ்விற்கான, பந்தல்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தேனூர் மண்டபத்தில் தேனூர் கிராம முக்கியஸ்தர்கள், கள்ளழகர் கோயில் நிர்வாகத்தினர், மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ள, கொட்டகை முகூர்த்தம் என்று சொல்லக்கூடிய பந்தல்கால் நடப்பட்டது.

முன்னதாக முகூர்த்தக் காலுக்கு விசேஷ பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்ற நிலையில், சைவ, வைணவ மதத்தைக் குறிக்கும் வண்ணம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடைபெறக்கூடிய சித்திரைத் திருவிழா பத்திரிக்கை மற்றும் அழகர்கோவில் சித்திரைத் திருவிழா குறித்த பத்திரிகைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

கள்ளழகராக சுந்தரராஜ பெருமாள் அழகர் மலையில் இருந்து தேனூர் மண்டபம் வரும்வரை உள்ள 430க்கும் மேற்பட்ட மண்டபங்களில் எழுந்தருள்வார். இந்த மண்டப உரிமைதாரர்கள் கோயில் நிர்வாகத்துக்குக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் மாறாக தேனூர் மண்டபத்தில் எழுந்தருளும் கள்ளழகர் கோயில் சார்பாக, தேனூர் கிராம மக்களுக்குக் கட்டணம் செலுத்துவது தனிச்சிறப்பு.

மண்டுக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெறும். அதனை ஒட்டி முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மதுரை சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து புகைப்படங்களைத் தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவு! - Madurai Chithirai Festival

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.