ETV Bharat / state

பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு; ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு! - PALLIKARANAI HONOR KILLING Case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 24, 2024, 6:46 PM IST

Pallikaranai Honor Killing Case: சென்னை பள்ளிக்கரணையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி சர்மிளா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரவீன் சர்மிளா
பிரவீன் சர்மிளா

சென்னை: சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (26). இவர் வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்த சர்மிளா என்ற பெண்ணை கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி இரவு, 5 பேர் கொண்ட கும்பலால் பிரவீன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக சர்மிளாவின் சகோதரர் தினேஷ் உட்பட ஐந்து பேரை பள்ளிக்கரணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், பிரவீன் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததால், அவரை வெட்டி படுகொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர். இந்த நிலையில், தனது கணவரின் இறப்பைத் தாங்க முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்த ஷர்மிளா, கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், அவரை மீட்ட குடும்பத்தினர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த ஷர்மிளா, நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சர்மிளாவின் உடலை வாங்காமல் அவருக்கு நீதி கிடைக்க வேண்டுமென பிரவீன் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர். மேலும், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி சர்மிளாவின் தாய், தந்தை, சகோதரர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், சர்மிளா தற்கொலை செய்து கொண்ட வழக்கை ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆர்டிஓ முன்னிலையில் சர்மிளாவின் உடல், உடற்கூறு ஆய்வு செய்யப்பட பிரவீன் குடும்பத்தினர் ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும், முறையான விசாரணைகள் நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்பு, இந்த உடற்கூறு ஆய்வு செய்யப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ரயிலில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம்: போலீசிடம் நயினார் நாகேந்திரனின் உறவினர் அளித்த முக்கிய வாக்குமூலம்! - Rs 4 Crore Cash Seized Issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.