ETV Bharat / state

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: தமிழகத்தில் பொது விடுமுறை - ஓபிஎஸ் வலியுறுத்தல்..!

OPS demands public holiday: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழகத்திலும் நாளை பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்திலும் பொது விடுமுறை வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தல்
அயோத்தி ராமர் கோயில் திறப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2024, 5:27 PM IST

சென்னை: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நாளை (ஜன.22) நடைபெற உள்ள நிலையில் தமிழகத்திலும் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என முன்னாள் முதலமைர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விழாவில் பிரதமர், மத்திய அமைச்சர்கள், உலக நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் தனியார்த் துறை வல்லுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மத்திய அரசின் அனைத்து அலுவலகங்களும் பிற்பகல் 2.30 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல மத்திய பிரதேசம், அரியானா, திரிபுரா, உள்ளிட்ட பல மாநிலங்களிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டிலும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அயோத்தி இராமர் கோயில் கும்பாபிஷேகத்தைப் பொதுமக்கள் கண்டு களிக்க ஏதுவாக அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் மாநில தொழில் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: "ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தமிழகத்தில் விடுமுறை" - வானதி சீனிவாசன் கோரிக்கை!

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அரிக்கையில், "இந்துக்கள் வணங்கும் தெய்வமான பகவான் இராமர் பிறந்த இடத்தில் அவருக்குக் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது இந்திய நாட்டு மக்களின் விருப்பமாக இருந்த நிலையில், பகவான் இராமர் பிறந்த இடமான அயோத்தியில் அவருக்குப் பிரம்மாண்டமான கோயில் எழுப்பப்பட்டு அதற்கான கும்பாபிஷேகம் நாளை (ஜன.22) அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

இந்த விழாவில், இந்திய மக்களின் தெய்வீகக் கனவை நிறைவேற்றிய மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். இந்த மிகப் பிரம்மாண்டமான திருக்கோயில் திறப்பு விழாவினை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. இதனை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் விடுமுறை அளித்துள்ளன.

  • அயோத்தி இராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பொதுமக்கள் கண்டு களிக்க ஏதுவாக அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் மாநில தொழில் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்க தி.மு.க. அரசை வலியுறுத்தல்! pic.twitter.com/HbQbXnMvpC

    — O Panneerselvam (@OfficeOfOPS) January 21, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இராமர் கோயில் கும்பாபிஷேகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தமிழ்நாட்டு மக்களிடையே மேலோங்கியுள்ளது. எனவே, தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில், இராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான ஜன.22 அன்று அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயில் திறப்பு - எந்தெந்த மாநிலங்ளில் விடுமுறை? முழு தகவல் இங்கே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.