ETV Bharat / state

பொக்லைன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து.. சம்பவ இடத்திலேயே வழக்கறிஞர் உயிரிழப்பு! - VELLORE BIKE JCB ACCIDENT

வேலூரில் பொக்லைன் வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே வழக்கறிஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனை, விபத்துக்குள்ளான இருசக்கர வாகனம்
அரசு மருத்துவமனை, விபத்துக்குள்ளான இருசக்கர வாகனம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

வேலூர்: சாலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் மரத்தை ஏற்றிச் சென்ற பொக்லைன் (JCB) வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளாயுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே இருசக்கர வாகனத்தில் சென்ற வழக்கறிஞர் உயிரிழந்துள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து அரியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் விசாரணையில், வேலூர் மாவட்டம், ஊனை மேட்டூரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ரமேஷ். இவர் நேற்று (டிச.15) ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் ஆவரம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியில் சாலையோரம் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றுள்ளது. இதில், வெட்டிய மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் பொக்லைன் வாகனம் ஈடுபட்டிருந்துள்ளது.

இந்த நிலையில், பொக்லைன் வாகனம் வெட்டிய மரங்களை ஓர் இடத்தில் போட சென்றுள்ளது. அப்போது, அவ்வழியாக வந்த வழக்கறிஞர் ரமேஷ், சாலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் பொக்லைன் வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே வழக்கறிஞர் ரமேஷ் உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க: கோவை அருகே தென்னை மரத்தில் மோதி நிலைகுலைந்த கார்.. தாய், மகன் பலியான சோகம்..!

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரியூர் காவல்நிலைய போலீசார், இப்பகுதி தங்கள் எல்லை இல்லை எனவும், இவை வேலூர் கிராமிய காவல்நிலையம் என்றும் தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த கிராமிய காவல்நிலைய போலீசார், இது அரியூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதி என தட்டி கழித்துள்ளனர்.

இதனையடுத்து, அரியூர் போலீசார் உயிரிழந்த வழக்கறிஞர் ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து அரியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.