திருப்பத்தூர்: ஸ்பா சென்டர்கள் என்ற பெயரில் சிலர் பாலியல் தொழில்களில் செய்து வருவதும் அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்தநிலையில் திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஸ்பா என்கிற பெயரில் பாலியல் தொழில் செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவிற்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து மாவட்டம்தோறும் உள்ள ஸ்பாக்களை கண்காணிக்க வேண்டும் ஸ்ரேயா குப்தா உத்தரவிட்டார் அதன் அடிப்படையில் திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் கடந்த இரண்டு தினங்களாக திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் உள்ள ஸ்பாக்களை கண்காணித்து வந்தனர்.
இதையும் படிங்க: நெல்லை பணகுடி போலீஸ் ஸ்டேஷனில் குவிந்த திருநங்கைகள்.. போலீசார் அடித்து விரட்டியடிப்பு.. என்ன நடந்தது?
அப்போது திருப்பத்தூர் வாணியம்பாடி சாலை அருகே தூய நெஞ்ச கல்லூரி எதிரே உள்ள ஸ்பா சென்டரரை கண்காணித்த போது பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்(30) என்பவர் வெளி மாநிலங்களிலிருந்து பெண்களை அழைத்து வந்து ஸ்பா என்கிற பெயரில் 2 பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழில் செய்து வருவதைக் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து 40 வயது உள்ள ஒரு பெண்ணையும் 24 வயது உள்ள ஒரு பெண்ணையும் மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்த போலீசார், தமிழ்செல்வனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் சட்டவிரோதமாக ஸ்பா என்கிற பெயரில் இதுபோன்று பாலியல் தொழிலில் ஈடுபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். உண்மைத்தன்மை கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.