கடலூர்: கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 56 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 160 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளச்சாராய விற்பனையில் தொடர்புடைய ஆறு நபர்களை கைது செய்துள்ளனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கியமாக, இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான மாதேஷ் நண்பர் பண்ருட்டியில் பிரபல சிப்ஸ் கடை நடத்திவரும் சக்திவேலை திருவண்ணாமலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தன்னுடைய ஜிஎஸ்டி பில்லை பயன்படுத்த மாதேஷிற்கு சக்திவேல் அனுமதி அளித்ததால் அதனை பயன்படுத்தி மினரல் டர்பன்டைன் ஆயில் என்ற பொருளை வாங்கி தண்ணீரில் கலந்து விற்கப்பட்டது தான் பல உயிரிழப்பு ஏற்பட காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும் பண்ருட்டியில் வேறு யாராவது தொடர்பில் உள்ளார்களா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளச்சாராயம் விவகாரத்தில் சிப்ஸ் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: மேலும் மூவர் கைது!