ETV Bharat / state

படுத்த படுக்கையான மனைவி.. வேறு வழியில்லாமல் கணவர் எடுத்த முடிவு.. கலங்க வைக்கும் குமரி சம்பவம்! - bedridden wife murder

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே படுத்த படுக்கையாக கிடந்த 75 வயது மனைவியை கழுத்தறுத்துக் கொலை செய்த 83 வயதான கணவர் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மனைவி லட்சுமி மற்றும் கணவன் சந்திரபோஸ்
மனைவி லட்சுமி மற்றும் கணவன் சந்திரபோஸ் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2024, 1:56 PM IST

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அடுத்த ஆசாரிவிளைக் கலைஞர் காலணி பகுதியைச் சேர்ந்த 83 வயதான முதியவர் சந்திரபோஸ். இவரது மனைவி 75 வயதான லட்சுமி. இவர்களுக்கு 3 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக சந்திர போஸ், அவரது மனைவி லட்சுமி ஆகிய இருவருக்கும் உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. சந்திர போஸ் கண்பார்வை குறைந்து காணப்பட்டுள்ளார். அவருக்கு லட்சுமி தான் வழிகாட்டியாக இருந்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி லட்சுமிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு எலும்புகள் வலுவிழந்து அவரால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் உடல் மெலிந்து படுத்த படுக்கையாக இருந்து உள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தான் இருவரையும் கவனித்து வந்து உள்ளனர்.

இரண்டு ஆண்டுகளாக படுக்கையில் இருந்ததால் முதுகுப் பகுதியில் புண் ஏற்பட்டு, நாளாக நாளாக அழுகி புழுக்கள் வந்துள்ளன. வலியும், வேதனையும் லட்சுமிக்கு அதிகரித்து தொடர்ந்து வலியால், அவர் கதறத் தொடங்கியுள்ளார். கடந்த சில நாட்களாக வேதனை மிக அதிகமாக இருந்ததால் தாங்க முடியாமல் கதறி உள்ளார்.

கண்பார்வை சரியாக தெரியாத நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் சந்திரபோஸ் நிலை குலைந்துள்ளார். இல்லற வாழ்வில் தன்னுடன் பயணித்தவள் படுக்கையில் கிடந்து போராடுகிறாளே என்ற எண்ணமும், கவலையும் சந்திரபோஸை இறுக்கியுள்ளது. மருத்துவர்கள் வந்து பார்த்து மருந்துகள், மாத்திரை வழங்கியும் லட்சுமியின் வேதனை தீரவில்லை.

இதையும் படிங்க: 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்துக் கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தை.. மதுரையில் பரபரப்பு!

இந்த நிலையில், ஒரு சில நாட்கள் முன்பு லட்சுமியின் உடல் வலி வழக்கத்தை விட அதிகரித்து உள்ளது. அக்கம் பக்கத்தில் வந்து பார்த்து ஏற்கனவே வீட்டில் இருந்த மருந்து, மாத்திரைகளை கொடுத்து உள்ளனர். ஆனால், விடிய விடிய லட்சுமி கதறியவாரே இருந்து உள்ளார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத சந்திர போஸ், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து லட்சுமியை அறுத்துள்ளார். இதில் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு கதறிய லட்சுமி படுத்த படுக்கையிலேயே மரணம் அடைந்தார். அவரது உடலை கட்டிப்பிடித்து கதறிய சந்திரபோஸ், தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சந்திரபோஸின் மூத்த மகன் ஆனந்த் சாப்பாடு கொடுக்க காலையில் அங்கு வந்து உள்ளார். அப்போது வீட்டில் தாய் லட்சுமி பிணமாக கிடப்பதையும், தந்தை சந்திரபோஸ் உயிருக்குப் போராடியதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து உள்ளார். தகவலின் பேரில் இரணியல் போலீசார் உயிருக்குப் போராடிய சந்திரபோஸை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். லட்சுமி உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த துயரமான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.