ETV Bharat / state

ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்.. முதியவர் போக்சோவில் கைது! - Sexual Harassment Case - SEXUAL HARASSMENT CASE

Sexual Harassment Case: ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாய் பேச முடியாத 5 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

File Image
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 6, 2024, 10:36 PM IST

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முதியவர் உதயன் (64). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் பேத்திக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த வாய் பேச முடியாத 5 வயது சிறுமியை நேற்றிரவு விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்றதோடு சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

சிறுமியை நீண்ட நேரமாக காணததால் சந்தேகமடைந்த தாய் தேடிச் சென்ற போது, சம்பவத்தை நேரில் பார்த்து கூச்சலிட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த கலவை போலீசார் சிறுமியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதோடு, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவரை கையும் களவுமாக பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து கலவை போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு, முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் உடல் BSP அலுவலகத்தில் அடக்கமா? நாளை விசாரணை! - Armstrong Murder Case

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.