சென்னை: நடத்த முடிந்த 18வது நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கூட்டணிக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனியிடம் 5,09,664 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேநேரம், அவரை எதிர்த்து பாஜக் கூட்டணியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 3,42,882 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
இந்நிலையில், தேர்தல் முடிந்து 45 நாட்களுக்குப் பின் தேர்தல் வழக்கு தொடர வேண்டும் என்ற நடைமுறையின் படி, ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், திமுக வேட்பாளர் பல ஆவணங்களை மறைத்துள்ளார். எனவே, அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் கையொப்பமிடுவதற்காக நீதிமன்றத்திற்கு இன்று (செவ்வாய்கிழமை) வந்திருந்தார்.நீதிமன்றத்திற்கு வந்த பன்னீர்செல்வம், நீதிமன்ற பதிவாளர் முன்பு ஆஜராகி அனைத்து ஆவணங்களிலும் கையெழுத்திட்டார். பின்னர், நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்