ETV Bharat / state

விக்கிரவாண்டியில் பதிவான அதிமுக வாக்குகள் யாருக்கு போயிருக்கு? - ஓபிஎஸ் ரியாக்‌ஷன் என்ன? - o panneerselvam

admk votes in vikravandi by election: விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் 83 சதவீதத்தின் மேல் வாக்குப் பதிவாகியுள்ளது என்றால், அதிமுக வாக்குகளும் பதிவாகியுள்ளது என்றுதான் அர்த்தம் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.

ஓ. பன்னீர்செல்வம்
ஓ. பன்னீர்செல்வம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 11, 2024, 1:03 PM IST

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக துணைப்பொது செயலாளர் செந்தமிழன் மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் பேசியதாவது; ''மாவீரன் புகழ் உலகம் இருக்கும் வரை இருக்கும். நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம் என்றால் அதற்கு முதல் குரல் கொடுத்தவர் அழகு முத்துக்கோன் தான்.

புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, 50 ஆண்டுகள் ரத்தத்தை சிந்தி வளர்த்த இந்த மாபெரும் இயக்கம், நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் படு தோல்வி அடைந்ததற்கு யார் காரணம் என்பதை உணர வேண்டும்.

இரட்டை இலை சின்னம் நாடாளுமன்றத் தேர்தலில் ஏழு இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. தொண்டர்களின் எழுச்சிக்காக தான் இதனை புரட்சித்தலைவர் உருவாக்கினார். பத்து தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு யார் காரணம் என நாட்டு மக்களுக்கு தெரியும்.

இந்த நிலை தொடரக்கூடாது என்று தான் பிரிந்திருக்க கூடிய அதிமுக இணைய வேண்டும் என்பதற்காக அதிமுக தொண்டர்கள் கூக்குரல் இட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முதல் தோல்விலேயே நான் கூறினேன், தோல்வி ஏற்பட்ட இடத்தில் சென்று நேரடியாக குறைகளை அறிந்து செயல்படுவோம் என்று யாரும் கேட்கவில்லை. விக்கிரவாண்டியில் 83 சதவீதத்தின் மேல் வாக்குப் பதிவாகியுள்ளது என்றால், அதிமுக வாக்குகளும் பதிவாகியுள்ளது என்றுதான் அர்த்தம்.

அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பது தேர்தல் முடிவுக்குப் பிறகு தெரியவரும் என கூறினார். பொது மக்களிடம் நல்ல அபிப்பிராயத்தை நாம் இழந்திருக்கிறோம்'' என்றார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் 83 சதவீதத்தின் மேல் வாக்குப் பதிவாகியுள்ளது என்றால், அதிமுக வாக்குகளும் பதிவாகியுள்ளது என்றுதான் அர்த்தம்'' என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.

இதையும் படிங்க: 'துரோகிகள் நிறைய உள்ளனர்'.. 2026 தேர்தலுக்கு தயாராகும் அதிமுக.. ஆலோசனை கூட்டத்தில் ஈபிஎஸ் முடிவென்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.