ETV Bharat / state

நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம் தொகுதி தேர்தல் வெற்றிகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! - Case against election results

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 18, 2024, 3:20 PM IST

Updated : Jul 18, 2024, 3:50 PM IST

Petition against Lok Sabha election results: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன், விஜய பிரபாகரன் ஆகியோர் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

உயர் நீதிமன்றம் மற்றும் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்கள்
உயர் நீதிமன்றம் மற்றும் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்கள் (Photo credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: நடந்து முடிந்த 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஷ் கனியிடம் 1 லட்சத்து 66 ஆயிரத்து 782 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தோல்வியடைந்தார்.

அதேபோல், நெல்லையில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் திமுக தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸிடம் போட்டியிட்டு தோல்வியடைந்தார். மேலும், விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், திமுக தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இந்நிலையில், தேர்தல் முடிந்து 45 நாட்களுக்குள் தேர்தல் குறித்த வழக்கு தொடர வேண்டும் என்ற நடைமுறையின் படி, ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன், விஜய பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தேர்தல் வழக்கு தாக்கல் செய்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "பிரிந்திருக்கும் கட்சி மீண்டும் இணைய வேண்டும் என கட்சித் தொண்டர்கள் விரும்புகின்றனர். கட்சி தொண்டர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன். காவிரி தீர்ப்பை அரசிதழில் வெளியிட மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். அதை நடைமுறைப்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமையாகும். தமிழக முதலமைச்சர் தனது கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: காவிரியில் நீர்வரத்து 33 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு; ஒகேனக்கல்லில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி!

Last Updated : Jul 18, 2024, 3:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.