ETV Bharat / state

திமுகவுடன் எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டு; குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் பதிலடி!

OPS Challenges EPS: கரூரில் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் சார்பில் நடைபெற்ற அஇஅதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுகவை வலுவிழக்க செய்யும் எடப்பாடி பழனிசாமியை தொண்டர்கள் தூக்கி எறிவார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

OPS Challenges EPS
ஓபிஎஸ்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 9:13 AM IST

கரூர்: கரூர் நகரில் உள்ள தனியார் மகாலில் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் சார்பில் அஇஅதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மற்றும் கரூர் நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று(ஜன.28) நடந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய ஓபிஎஸ்,"திராவிட இயக்கத்தின் நீட்சியாக உருவான அஇஅதிமுக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டபோது, கட்சியில் உள்ள அடிப்படை உறுப்பினர் ஒருவர் தான், பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட்டது. இதை எந்த பொதுக்குழு கூட்டத்தாலும் மாற்றம் செய்திட முடியாது.

காரணம் அதிமுக என்னும் கட்சியில் சாதாரண தொண்டன் கட்சியின் மிகப்பெரிய பொறுப்பான பொதுச் செயலாளர் பதவியை வகிக்க முடியும் என்ற வரலாற்று சிறப்புமிக்க விதியை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வகுத்துச் சென்றார்.

அதன் அடிப்படையில், தான் புரட்சித்தலைவி அம்மா பொதுச்செயலாளர் பதவியை அலங்கரித்து தமிழக முதலமைச்சராக பதவி வகுத்து ஏழை, எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்திச் சென்றார். பொதுச்செயலாளர் பதவிக்கான விதியை மாற்றம் செய்யவோ, திருத்தம் செய்யவோ முடியாது என்ற சரத்து அதிமுக கட்சியின் அடிப்படை விதிகளில் ஒன்றாக உள்ளது.

ஆனால் எடப்பாடி பழனிசாமியோ தானாக பொதுச்செயலாளர் என்று மகுடம் சூட்டிக்கொண்டு, அதிமுகவின் முக்கிய விதியை காலில் போட்டு மிதித்துக் கொண்டு இருக்கிறார். இது அதிமுக தொண்டர்களுக்கான உரிமை. தொண்டர்களுக்காக வகுக்கப்பட்ட உரிமை. இந்த உரிமையை மீட்டெடுப்பதற்காக, தற்போது எனது தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள அஇஅதிமுக எனும் கட்சி தொண்டர்கள் உரிமை மீட்புகுழு.

அதிமுகவில் சாதாரண தொண்டன் மட்டும்தான் பொதுச் செயலாளர் பதவியை வகிக்க முடியும் என்ற விதியை எடப்பாடி பழனிசாமி திருத்தி குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாக அதிமுகவில் நிர்வாகியாக பணியாற்றி உள்ள ஒரு நபரை, மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிந்து பொதுச்செயலாளராக தேர்வு செய்யலாம் என எடப்பாடி பழனிசாமி விதியை திருத்தி பொதுச்செயலாளர் பதவியை அபகரித்துள்ளார்.

சாதாரண தொண்டனும் பொதுச்செயலாளர் பதவியை அடைய முடியும் என்ற விதியின் அடிப்படையில் தான் ஒபிஎஸ், இபிஎஸ் என்ற இருவரும் தலைமை பொறுப்புக்கு வந்தார்கள். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், அதிமுகவில் உள்ள ஒன்றைரை கோடி தொண்டர்கள் சேர்ந்து, எடப்பாடி பழனிசாமியை தூக்கி எறிவார்கள்.

அம்மாவின் மறைவுக்குப் பிறகு நிரந்தர பொதுச்செயலாளர் பதவி வழங்குவதற்கு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி கௌரவப்படுத்தப்பட்டது. ஏனென்றால் கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து அதிமுக எனும் கட்சியை வழிநடத்தி அசைக்க முடியாத மாபெரும் இயக்கமாக மாற்றியவர் புரட்சித்தலைவி அம்மா தான்.

அதற்காகத்தான் இந்த உச்ச பச்ச மரியாதையை வழங்கும் வகையில் நிரந்தர பொதுச்செயலாளர் எனும் பதவியை ஒரு மனதாக தேர்வு செய்து வழங்கினோம். அதன் அடிப்படையில் தான் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அதிமுகவில் உள்ள ஒன்றைரை கோடி தொண்டர்கள் ஒருமனதாக வாக்களித்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் கூட்டு தலைமை ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் இரண்டே வாரங்களில், அதிமுக ஒற்றை தலைமை அடிப்படையில் இயங்க வேண்டிய அவசியம் உள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறி, சட்டமன்ற பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தால் தமிழக மக்கள் மிகப்பெரிய வெற்றியை தருவார்கள் என்று கூறி அதிமுகவின் சட்டதிட்ட விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டார்.

இது தொடர்பாக அதிமுக கட்சியில் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக பாஜக மூத்த தலைவர், தன்னையும் எடப்பாடியையும் அழைத்து பேசினார்கள். அப்பொழுது டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்தி நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வாக்குகளைப் பிரித்ததால் அதிமுக வாக்கு வங்கி சரிந்துள்ளது.

மறுபுறம் ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் அதிமுகவின் வாக்கு வங்கியை வைத்துள்ளனர். எனவே அனைவரையும் ஒன்றிணைத்து அதிமுக வலுவான இயக்கமாக மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என அமித்ஷா கூறிய போது, எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொள்ள மறுத்து விட்டார்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தல், இடைத்தேர்தல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அனைத்திலும் அதிமுக படுதோல்வி அடைந்தது. இதற்கு மிக முக்கிய காரணம் எடப்பாடி பழனிசாமி மட்டும் தான். இதை எடப்பாடி பழனிசாமியால் மறுக்க முடியுமா? நிச்சயம் முடியாது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக இரு அணிகளாக போட்டியிடுவதால் திமுக வெற்றி பெற்று விடும் எனக் கூறி இருவரையும் வாபஸ் பெற கூறினார். எடப்பாடி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. எடப்பாடி அதிமுக தலைமை பொறுப்பில் பல்வேறு தவறான முடிவுகளை எடுத்து கட்சியை பலவீனப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் கூட, அதிமுகவில் சசிகலாவை இணைத்துக் கொள்வீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஒரு சதவீதம் கூட அதற்கு வாய்ப்பில்லை எனக் கூறினார். தனித்தனியாக இயங்கும் தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் அதிமுகவில் இணைந்தால் கூட்டுத்தலைமை உருவாகிவிடும் தனது பொதுச்செயலாளர் பதவி பறிபோகி விடும் என எடப்பாடி பழனிசாமி பயப்படுகிறார்.

அதிமுகவை மீண்டும் தமிழகத்தின் ஆட்சி கட்டிலில் அமர்த்த வேண்டும் என்ற எண்ணம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. அதிமுக என்னும் கட்சியை வலுப்பெற செய்யாமல் திமுகவுடன் கைகோர்ந்து செயல்படுவது எடப்பாடி பழனிசாமி தான்.தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்கள் அதிமுக கட்சியை வலுப்பெற வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் எடப்பாடி அதிமுக கட்சியை பல துண்டுகளாக உடைத்து, ஒற்றைத் தலைமை என்னும் பதவி ஆசையில் கட்சியை அழிக்கப் பார்க்கிறார்.

எனவே அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கட்சியை நிச்சயம் மீட்டெடுக்கும். அதற்காக மாவட்ட வாரியாக பணிகள் நடைபெற்று வருகிறது. பதவி வெறி பிடித்த எடப்பாடி பழனிசாமி அதிமுகவிலிருந்து, அதிமுக தொண்டர்களால் தூக்கி எறியப்படும் காலம் மிக விரைவில் வரவுள்ளது என ஓபிஎஸ் பேசினார்.

இதில், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆயில் ரமேஷ், கிழக்கு மாவட்டச் செயலாளர் மருத்துவர் கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதையும் படிங்க: உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு நீக்கம் - யுஜிசி அறிவிப்பிற்கு மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.