ETV Bharat / state

"இளைஞர்கள், பெண்கள் என் பக்கம் திரும்புவதை தடுக்கவே புதுமைப் பெண், தவப்புதல்வன் திட்டம்" - ஸ்டாலின் மீது சீமான் குற்றச்சாட்டு! - ntk seeman

NTk seeman : சீமான் பக்கம் ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் திரும்புவதைத் தடுக்கவே புதுமைப் பெண், தவப்புதல்வன் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை ஆர்ப்பாட்டத்தில் பேசும் சீமான்
சென்னை ஆர்ப்பாட்டத்தில் பேசும் சீமான் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 4, 2024, 8:22 PM IST

சென்னை: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, மின் கட்டண உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை ஆர்ப்பாட்டத்தில் பேசும் சீமான் (Video Credit - ETV Bharat Tamilnadu)

ஆர்ப்பாட்டத்தில் நாதக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, “இளைஞர்களை திமுக குற்றச் சமூகமாகவே உருவாக்கிவிட்டது. இந்தாண்டு மட்டும் 595 கொலைகள் நடந்துள்ளன. தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. குற்றச்செயல்களுக்கு கடுந்தண்டனை இல்லாததால் குற்றங்கள் தொடர்கின்றன. தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சரியில்லாமல் இருப்பது கேவலம். எல்லா கொடுஞ்செயல்களுக்கும் குழு அமைக்கிறது இந்த அரசு. கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு 38 குழுக்களை அமைத்துள்ளது.

இதில், நீட் தேர்வு தொடர்பான அறிக்கை என்ன ஆனது? தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் குழு அறிக்கை என்ன ஆனது? இதைவிட கொடுங்கோல் ஆட்சியை எங்கும் பார்க்க முடியாது. மத்திய, மாநில அரசுகளைவிட தனியார் நிறுவனங்களிடம் தான் அதிக மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன.

மின்சார உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள், மின் விநியோகத்திற்கு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. தமிழகத்துக்கு தொழிலதிபர் அதானி ஏன் வந்தார் என்ற விவரத்தை தெரிவிக்க அரசு ஏன் தயங்குகிறது? காட்டுப்பள்ளி துறைமுகத்தை கட்டிவிடலாம் என அதானி நினைத்தால் அது நடக்காது. அது எங்கள் நாடு, மண், இனம் சார்ந்த பிரச்சினை.

மெரினா கடற்கரையில் நம்ம சென்னை என்ற வாசகம் "நம்ம" என்பது தமிழில் உள்ளது ஆனால் "சென்னை" என்பது வேறு மொழியில் உள்ளது. 'முத்தமிழ் முருகன்' மாநாட்டில் குறைந்தது 20 நிமிடங்கள் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முருகனை பற்றி பேசுவாரா? திராவிட மாடல் ஆட்சியில் திராவிட புதல்வன் என்று ஏன் பெயர் வைக்கவில்லை, தமிழ் புதல்வன் என்று எதற்கு பெயர் வைக்கிறீர்கள்? நாங்கள் தமிழ் தேசியம் பேசினால் இன பாகுபாடு, பிரிவினைவாதம் என சொல்கிறார்கள்.

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்டதற்கு காரணம் காடுகளை அழித்தது தான் என இப்போது பேசுகிறார்கள். யார் மரங்களை வெட்டியது? காடுகளை அழித்தவர்களே இன்று அதைப்பற்றி பேசுகிறார்கள்.காளியம்மாவை நான் பிசிரு என்பேன் உசுரு என்பேன். அது எங்கள் கட்சி பிரச்சனை.எங்கள் கட்சிக்குள் நடப்பதை எதற்கு நீங்கள் பேசுகிறீர்கள். 15 ஆண்டுகளாக ஒரு பெண்ணை வைத்து பேசினார்கள்.அதன் பிறகு தான் எனக்கு பெண் ரசிகர்கள் அதிகரித்தார்கள். சீமான் பக்கம் ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் திரும்புவதைத் தடுக்கவே புதுமைப் பெண், தவப்புதல்வன் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது” இவ்வாறு அவர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: "வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு தவறான தகவல்" - அன்புமணி ராமதாஸ் கண்டனம்! - Vanniyars reservation Issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.