சென்னை: திராவிடத்தையும் பெரியாரையும் ஒழிப்பது தான் எனது நோக்கம் என அண்ணன் சீமான் பேசியிருப்பது இந்துத்துவா சக்திகளின் வளர்ச்சிக்கு உதவுமே ஒழிய தமிழ் தேசிய வளர்ச்சிக்கு உதவாது என்று நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செகதீச பாண்டியன் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து அண்மையில் கூறியிருந்த சில கருத்துகள் பொதுவெளியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் திராவிடம் குறித்தும், பெரியார் பற்றியும் கருத்து தெரிவித்திருந்த சீமானை அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' திராவிடத்தையையும் பெரியாரையும் ஒழிப்பதுதான் எனது நோக்கம் என்று அண்ணன் சீமான் பேசியிருப்பது இந்துத்துவா சக்திகளின் வளர்சிக்கு உதவுமே ஒழிய தமிழ் தேசிய வளர்ச்சிக்கு உதவாது! ஆரிய வைதிக பிராமண, இந்துத்துவாவை, இந்தியை, இந்திய தேசியத்தை எதிர்ப்பதுதான் தமிழ் தேசியர்களின் முதல் கடமை! பெரியாரை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் இதுதான் நோக்கம்.
தமிழ் தேசியத்திற்கு ஆரியம் பகையாளி,திராவிடம் பங்காளி,(அண்ணன் சீமானின் கருத்து)பகையை வீழ்த்த பங்காளிகளுடன் கரம் கோர்த்து தமிழ் தேசியம் வெல்வோம்! pic.twitter.com/Xr6CgP6lvD
— jagadesan pandian (@apjagadesan) January 12, 2025
தமிழை ஆட்சி மொழியாக வழிபாட்டுமொழியாக வழக்காடு மொழியாக, பெரியாரியவாதிகள் ஏற்றுக்கொள்கிறார்கள், இந்துத்துவாவாதிகள் ஏற்றுக் கொள்கிறார்களா?
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்ஆகலாம் என்பதை பெரியாரியவாதிகள் ஏற்றுக் கொள்கிறார்கள்,இந்துத்துவாதிகள் எதிர்க்கிறார்கள்.
இதையும் படிங்க: சீமானின் பேச்சு பதட்டத்தை உருவாக்குகிறது.. உடனே நடவடிக்கை எடுங்க - கோர்ட் அதிரடி உத்தரவு..!
தேசிய கல்விக் கொள்கையை பெரியாரை ஏற்றுக்கொண்டவர்கள் எதிர்கிறார்கள்! இந்துத்துவாவாதிகள் திணிக்கிறார்கள்,
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே குடும்ப அட்டை போன்ற திட்டங்களை ஆர்எஸ்எஸ் பாஜக திணிக்கிறது, பெரியாரியவாதிகள் எதிர்க்கிறார்கள்,
திராவிட கருத்தியல் சென்ற நூற்றாண்டில் தோன்றிய கருத்தியல். பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழையும், தமிழர்களையையும் அழித்து வந்தது ஆரியம் தான். நாம் தமிழர் கட்சியை துவக்கியதும், அன்றைக்கு அரவனைத்தவர்களும் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்காரிஸட்டுகள் தான்.
திராவிடத்தையையும் பெரியாரையும் ஒழிப்பதுதான் எனது நோக்கம் என்று அண்ணன் சீமான் பேசியிருப்பது அவருடைய சொந்த கருத்தே ஒழிய, நாம் தமிழரின் ஒட்டுமொத்த கருத்தல்ல. ஆரியம்தான் தமிழனின் முதல் பகை, அண்ணன் சீமானின் கருத்து ஆர்எஸ்எஸ், பாஜக, சங்கபரிவார் அமைப்புகளுங்கு துணைபோகுமே ஒழிய ஒருபோதும் தமிழ் தேசியம் வெல்ல உதவாது,
சீமான் அவர்கள் திராவிடத்தையும்,பெரியாரையும் ஒழிக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு பகைவர்களின் சூழ்ச்சிக்கு பலியாகமால் நட்பு முரணோடு கைகோர்த்து தமிழ் தேசியம் வெல்ல காலத்திற்கு ஏற்றார்போல் வேலைத்திட்டத்தை தயார் செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்' என்று செகதீச பாண்டியன் கூறியுள்ளார்.