ETV Bharat / state

தேர்தல் ஆணையம் எங்களுக்குக் கொடுத்த மைக் சின்னம் வேறு, வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டு வரும் மைக் சின்னம் வேறு - நாதக சார்பில் புகார்! - Lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

Issue in NTK mic symbol: நாம் தமிழர் கட்சிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கிய மைக் சின்னத்தை வாக்குப் பதிவு இயந்திரத்தில் பொருத்தாமல், வேறு ஒரு மைக் சின்னத்தைப் பொருத்திவருவதாகக் குற்றம் சாட்டி அக்கட்சி சார்பில் தலைமைத் தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது.

நாதக சார்பில் புகார்
வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டு வரும் மைக் சின்னம் வேறு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 11, 2024, 7:45 PM IST

சென்னை: தேர்தல் ஆணையம் ஒதுக்கிய மைக் சின்னத்திற்குப் பதிலாக வேறு மைக் சின்னம் பொருத்துவதால் வாக்குகள் பாதிக்கும், எனவே உடனடியாக தங்களின் மைக் சின்னத்தைப் பொருத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என, அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவின் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் சங்கர் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகுவை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவின் மாநிலச் செயலாளர் சங்கர் நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில், “இந்தியத் தேர்தல் ஆணையம், நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ள மைக் சின்னத்திற்குப் பதில் வேறு ஒரு மைக் சின்னம் தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியின் சின்னமாக வாக்குப் பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டு வருகிறது. அதனைத் தடுத்து நிறுத்தி, தங்களுக்கு ஒதுக்கிய மைக் சின்னத்தைப் பொருத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்”, என குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சங்கர், “தங்களின் வாக்கு வங்கியைப் பாதிக்கவே பாஜகவும், திமுகவும் இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு இலவசமாகச் சின்னம் புத்தகம் அச்சடித்துக் கொடுக்கிறது.

இமாச்சல் பிரதேசத்தில் 2021 ம் ஆண்டு பயன்படுத்திய அந்த புத்தகத்தைப் பார்த்து, இங்கு நாம் தமிழர் கட்சிக்கு அந்த மைக்கை பொருத்தியுள்ளனர். இந்தியத் தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கிய மைக் சின்னத்தில் மைக் (ஆன் ஆப்ஃ) பட்டன் இருக்காது. ஆனால் தற்போது பொருத்தப்படும் மைக் சின்னத்தில் ஆன் ஆப்ஃ பட்டன் உள்ளது. இது நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கியைப் பாதிக்கும், எனவே உடனடியாக தங்களின் மைக் சின்னத்தைப் பொருத்த நடவடிக்கைகள் எடுக்க அதிகாரியிடம் வலியுறுத்தி உள்ளோம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: எனது தொலைப்பேசியை ஒட்டுக்கேட்கிறார்கள்; சிறையிலிருந்தே கண்காணிக்கிறார் செந்தில் பாலாஜி - அண்ணாமலை குற்றச்சாட்டு! - LOK SABHA ELECTION 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.