ETV Bharat / state

300 மூட்டை அரிசி, 200 கிடா கறி.. ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கம கம கறி விருந்து! - vadakattan karuppusamy temple dindigul

vadakattan karuppusamy temple dindigul: நத்தம் அருகே வடகாட்டான் கருப்புசாமி கோயில் திருவிழாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கறி விருந்து விமரிசையாக நடைபெற்றது.

Non veg feast Image
கறி விருந்து புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 6, 2024, 9:19 AM IST

திண்டுக்கல்: நத்தம் அருகே கருத்தலக்கம்பட்டி புதூர் கிராமத்தில் வடகாட்டான் கருப்புசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் பல நூறு ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் திருவிழாவின் போது இருந்து ஒரு கிலோமீட்டருக்கு முன்பாகவே பெண்கள் வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. திருவிழாவில் பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது.

கறி விருந்து வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

இக்கோயிலில் விபூதி முதல் பூஜை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எந்த பொருளையும் கோயில் எல்லையைத் தாண்டி கொண்டு செல்ல அனுமதி இல்லை. விழாவில் தமிழ்நாட்டில் பல பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஆடுகள், அரிசி, காய்கறி உள்ளிட்டவற்றை நேர்த்திக் கடனாக கோயிலுக்கு வழங்குகின்றனர். மூன்று வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் இத்திருவிழா இந்த ஆண்டு கடந்த மே 28ஆம் தேதி தொடங்கியது.

தொடர்ந்து வடகாட்டான் கருப்புசாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கறி விருந்து கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்றது. நேர்த்திக் கடனாக 200க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு சமைக்கப்பட்டன. 300 மூட்டை அரிசியில் சாதம் தயாரானது.

இந்த கறி விருந்தில் அங்கு கூடியிருந்த சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு சாதமும், ஆட்டுகறி குழம்பும் பிரசாதமாக வழங்கப்பட்டது. கறி விருந்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், நத்தம், செந்துறை, சாணார்பட்டி, குட்டுபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரம் பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டனர். மேலும் கோயிலில் செய்யப்படும் ஆட்டுக்கறி மற்றும் சாதம் மீதமானால் அப்பகுதியிலே குழி தோண்டி புதைக்கப்படுவது சடங்காக கடைபிடிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: சதுரங்க வேட்டை படத்தையே ஓரம் தள்ளிய மோசடி.. பிரதமருக்கே லஞ்சம்? திண்டுக்கல்லில் நடந்தது என்ன? - Scam In The Name Of Government

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.